அவரவர் வானம் அவரவர் காற்று
Avaravar Vaanam Avaravar Kaatru
₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அ. லட்சுமிகாந்தன்
பதிப்பகம் :வம்சி பதிப்பகம்
Publisher :Vamsi Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :66
பதிப்பு :1
Published on :2005
Add to Cartஉன்னிடம் திரும்பிக்கொண்டிருக்கிறேன். உன் மணற்கடிகை தீர்ந்துவிடாமல் திருப்பிவைக்கும் வேலை எனது. உன்னைக் காதலிப்பதைவிட இது சுவாரஸ்யமாக இருக்கிறது. 2. நிழல் நகர்கிறது காற்று வீசுகிறது கிளை அசைகிறது பூ உதிர்கிறது. அதனால் என்ன தாமதமாகவே வா ஒன்றும் கெட்டுப்போய்விடவில்லை. 3. எனது தூரத்தை அழைத்துக்கொண்டு வந்திருக்கிறேன். உன் அண்மையை கூட்டிக்கொண்டு வா. இரண்டையும் ஆசுவாசப்படுத்துவதே நம் சந்திப்பின் திட்டம்.