book

திருக்குறளில் மனித உரிமைகள்

Thirukuralil Manitha Urimaigal

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ம. சித்ரா
பதிப்பகம் :தி பார்க்கர்
Publisher :The Parkar
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :100
பதிப்பு :1
Published on :2007
Add to Cart

மனிதனை அவனுடைய உள்ளார்ந்த உணர்வுகளோடு மதிக்க வேண்டும் என்பது மனித உரிமையாகும். சுடுசொற்களினால் அடுத்தவரது உணர்வுகளைப் புண்படுத்துதல் கூட உரிமை மீறல் ஆகும் என்னும் கருத்தினை திருவள்ளுவர் இவ்வாறு தெளிவுறுத்துகிறார்."இன்சொல் இனிது ஈன்றல் காண்பான் எவன்கொலோவன்சொல் வழங்குவது". (குறள் 99) பிறர் சொல்லும் இனிமையான சொற்கள் தனக்கு இன்பத்தைத் தருவதை உணர்ந்த பிறகும், மற்றவர்களிடம் கடுமையான சொற்களைப் பேசுவது என்ன பயன் கருதியோ? பிறர் கூறும் இன்சொல் தனக்கு இன்பம் தருவதைக் காண்கின்றவன், தன் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்று விரும்புகின்றவன், தான் மட்டும் பிறரிடம் வன்சொல் கூறி அவர்கள் மனத்தைப் புண்படுத்துதல் முறையாகாது என்று வலியுறுத்துகிறார் வள்ளுவர்.