இப்படிக்கு நிலவு
Ippadikku Nilavu
₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஹம்சா தனகோபால்
பதிப்பகம் :கிரிஜா பதிப்பகம்
Publisher :Kirija Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :288
பதிப்பு :1
Published on :2005
Add to Cartஷாலினி எதற்காக அரவிந்தன் அழைக்கிறான் என்று புரியாமலேயே அவனைப் பின்தொடர்ந்து மொட்டை மாடியின் படிகளில் ஏறினாள்.அந்திவானம் அழகாக இருந்தது... கைப்பிடி சுவரில் அமர்ந்தான் அரவிந்தன்... அவனருகே... காற்றில் பறந்த சேலை முந்தானையை இழுத்துச் செருகியபின் அவள் அமர்ந்தாள்."அதை எதுக்கு டிஸ்டர்ப் பண்ற...?" அரவிந்தன் விழிகளால் அவளை மேய்ந்தான்.
"எதை..?" என்று கேட்டவாறு அவனை நிமிர்ந்து பார்த்த ஷாலினி... அவன் பார்வையைக் கண்டு கொண்டாள்.'எப்படிப் பார்க்கிறான்' அவள் முகத்தில் வெட்கத்துடன் ஒரு செல்ல கோபம் சூழ்ந்தது...
"உன் சேலை முந்தானையைத்தான் சொல்றேன்...""ஆளைப்பாரேன்... இன்னும் அதே பார்வையை பார்த்துக்கிட்டு...""இன்னும்ன்னா...?""நமக்கு கல்யாணம் ஆன பின்னாடியும்ன்னு... அர்த்தம்..."
"கல்யாணமானா.. வேற பெண்ணைத்தான் சைட் அடிக்கக்கூடாது. பெண்டாட்டியையுமா சைட் அடிக்கக் கூடாது?""ஸ்வீட் ராஸ்கல்...""யார்...?""என் புருஷன்தான்..."இதை இனிப்பான ஒன்றை உச்சரிப்பதைப் போல மகிழ்ச்சியுடன் உச்சரித்தவளை காதலுடன் பார்த்தான் அரவிந்தன்.இந்தப் பெண்களுக்கெல்லாம் 'புருஷன்' என்ற சொல்லின்மேல் ஏனிந்த அதீத ஈர்ப்பு என்று நினைத்துக் கொண்டவனுக்கு-தனக்கும்... 'பெண்டாட்டி' என்ற சொல்லின் மீது அதீதமான ஈர்ப்பு இருப்பது நினைவிற்கு வந்தது.