book

நோபல் பரிசு பெற்ற இந்திய மேதைகள்

Noble Parisu Petra Indiya Methaigal

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பட்டத்தி மைந்தன்
பதிப்பகம் :சீதை பதிப்பகம்
Publisher :Seethai Pathippagam
புத்தக வகை :அறிவியல்
பக்கங்கள் :95
பதிப்பு :1
Published on :2015
Add to Cart

நோபல் பரிசை நிறுவிய ஆல்ஃபிரட் நோபல் ஓர் உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானி. தான் திரட்டிய பெருஞ் செல்வத்தை நோபல் பரிசு என்ற பெயரில் உலக அறிஞர்களுக்கு வழங்கிட அவர் நோபல் பரிசு என்ற அறிவியல் ஆய்வு நிறுவனத்தைத் துவக்கினார்.கி.பி. 1901-ஆம் ஆண்டு முதல் செயல்படத் தொடங்கிய இந்தப் பரிசுத் திட்டம், ஆண்டுதோறும் டிசம்பர் 10-ஆம் நாளன்று முதல் வழங்கப்பட்டு வருகிறது.
இந்தப் பரிசு : சாதி, மதம், இனம், நாடு, அரசியல் என்ற பாகுபாடுகள் எதுவுமில்லாமல், ஆய்வுத் தகுதிக்கு மட்டுமே மதிப்பளித்துக் கொடுக்கப்பட்டு வருவதால், அது உலகம் மதித்துப் போற்றும் பரிசாக இன்றும் இயங்கி வருகின்றது.
இலக்கியவியல், வேதியியல், இயற்பியல், உடற் கூற்றியல், பொருளியல், உலக அமைதியியல் போன்ற பல துறைகளில் உலக சாதனைகளைச் செய்த சிந்தனையாளர்களுக்கு மட்டுமே இந்தப் பரிசு வழங்கப்பட்டு வருகின்றது.