book

சினிமாவுக்கு போகலாம் வாங்க

Cinemavukku Pogalaam Vaanga

₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கு. ஞானசம்பந்தன்
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :168
பதிப்பு :1
Published on :2012
Out of Stock
Add to Alert List

கிராமத்துப் பள்ளிக்கூட வாழ்க்கை எல்லோருக்கும் எப்போதும் மறக்க முடியாத இனிய நினைவுகளின் தொடர்பதிவுகள். ஆற்றங்கரை, தென்னந்தோப்புகள், ரிங் தியேட்டர் படங்கள், கோவில் திருவிழாக்கள், முழுப்பரிச்சை லீவு நாட்கள், புகையோடு கூடிய ரயில் வண்டிப்பயணம், பொறாமைப்படாத - படவைக்காத நண்பர்கள் இவர்களோடு பார்த்த பழைய படங்கள்... இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்... சிறுவயதில் என்னைக் கவர்ந்த வாரப் பத்திரிக்கைகளில் ஒன்று கல்கி.வாண்டு மாமாவின் சித்திரத் தொடர் கதைகளும், சரித்திரக் கதைகளும் குறிப்பாகப் 'பொன்னியின் செல்வன்' கதையில் ‘வந்தியத்தேவனும்' ‘ஆழ்வார்க்கடியானும்' என்னோடு எப்போதும் இருக்கும் நல்ல நண்பர்கள். பல்லாண்டு காலங்களாகக் 'கல்கி' இதழின் வாசகனாக இருந்துவரும் எனக்கு அதே 'கல்கி' பத்திரிக்கையில் தொடர் எழுதும் வாய்ப்பினைத் தந்தவர் எழுத்தாளர் கல்கி அவர்களின் பேத்தியும் கல்கி பத்திரிக்கையின் ஆசிரியருமான திருமதி. சீதாரவி ஆவார். அவர்களுக்கு என் முதல் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ‘என்ன எழுதப் போகிறீர்கள்' என்று அவர்கள் கேட்டபோது சென்னையில் பொறுமையைச் சோதிக்கும் போக்குவரத்து நெரிசலில் மாட்டிக் கொண்டு (திரு ‘கல்யாணமாலை’ மோகன் அவர்கள் கார் ஓட்ட) முன்னும் பின்னும் போக முடியாமல் இருந்தபோது நான் திருமதி.சீதாரவி அவர்களிடத்தில் என் செல்போனில் சொன்னது இதுதான், ‘தரை டிக்கெட்டில் படம் பார்த்துக் கொண்டிருந்த கிராமத்துப் பையன் திரையில் தோன்றியது எப்படி என்று எழுதுகிறேன்’. இதைக் கேட்ட கல்கி ஆசிரியர் அவர்கள் மிகுந்த மகிழ்வோடு ‘உங்கள் பேச்சைப் போல நகைச்சுவையோடு எழுதுங்கள்' என்று அனுமதி தந்து என்னை எழுதத் தூண்டினார்கள், 'சினிமாவுக்குப் போகலாம் வாங்க’ தொடர் இப்படித்தான் தொடங்கியது. பட்டிமன்றப் பயணங்களுக்கு இடையில், ரயில் நிலையங்களில், அதிகமான நேரம் கிடைக்கும் போது விமான நிலையங்களில், என்று எழுதி வாரவாரம் கல்கி இதழுக்கு அனுப்புவதற்குள் நான் பட்ட பாடு,என்னிடத்தில் எழுதி வாங்கி அச்சிடுவதற்குள் அவர்கள் பட்ட பாடு சொல்லிமாளாது. எழுத்துக்கு எத்தனை வலியை, எத்தனை ஆயிரம் மக்களுக்கு என்னை எழுத்து மூலம் அறிமுகமாக்கியுள்ளது 'கல்கி' இதழ் என எண்ணும் போது மகிவேழ்ற்படுகிறது. மனம் நெகிழ்கிறது. டில்லியிலும், பம்பாயிலும் என்னைச் சந்திக்க வந்த நண்பர்கள் பலரின் கைகளில் 'கல்கி' பத்திரிகை. பட்டிமன்றம் முடியும்வரையிருந்து வாழ்த்திவிட்டு அந்த இதழிலே கையொப்பமும் அவர்கள் வாங்கிச் சென்றது என் வாழ்க்கையின் புதிய அனுபவங்கள். திரையரங்கங்களில்,திரை விலகிப் படம் தொடங்குவது போல அனைவருக்கும் நன்றி சொல்லி நான் விலகி நிற்க, 'சினிமாவுக்குப் போகலாம் வாங்க' உங்கள் கைகளில்...வாசித்து மகிழுங்கள், நேசமுடன் விமர்சியுங்கள். அன்புடன் கு. ஞானசம்பந்தன்