book

முகமற்றவர்களின் அரசியல்

Mugamattravargalin Arasiyal

₹110+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கே.எம். சரீப்
பதிப்பகம் :உயிர்மை பதிப்பகம்
Publisher :Uyirmmai Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :136
பதிப்பு :1
Published on :2014
ISBN :9789381975626
Add to Cart

சமூகத்தில் நிலவும் முரண்பாடுகளைப் புரிந்துகொள்ளவும் அவற்றைத் துடைத்தெறிகிற ஆற்றலை வழங்கும் படைப்புகளாக அனைத்து படைப்புகளையும் கருத முடியாது. மிதப்பதற்கு எல்லாக் கட்டைகளையும் பயன்படுத்த இயலாது. கரை ஏறுவதற்காகப் பயன்படுத்தும் கட்டை, முதலையாக இல்லாமல் இருக்க வேண்டும். சில கட்டைகள் தான் எப்போதும் மிதந்து கொண்டு, நாம் பற்றியதும் மூழ்கிவிடும் தன்மை கொண்டவை. இந்த இடையூறுகளுக்கு நடுவில் தான் ஒருவர் வாசகனாக வாழவேண்டியதிருக்கிறது. உண்மையை அறிந்துகொள்ள விரும்பும் வாசகர்களை, மடை மாற்றித் திசை திருப்பி விடுகிற “சமூக சேவையை” சிலர் மிகுந்த நுட்பமாகச் செய்துகொண்டே இருக்கிறார்கள். எழுதுகிறவர்களின் சமூக அந்தஸ்து, மொழித்திறன், சந்தைப்படுத்தும் ஆற்றல், அவர்களது பரிவாரங்களின் பேரிரைச்சல் இவைகளின் வழியே பெரும் பொய்கள் சாக்கடையைப் போலக் குடிநீர் ஏரிகளில் கலந்து விடுகிற காலம் இது. இத்தகைய இக்கட்டும், இடையூறும் நிறைந்த வாசக சூழலில், எளிய உண்மைகளை, எளிய மொழியில் பேசுகின்றன இந்தத் தொகுப்பில் உள்ள கட்டுரைகள். வாசகரின் அறிவுத்தேடலுக்கும் சிந்தனைத் திறனுக்கும் துணைபுரிகிற படைப்புகள். மிகுந்த சமூக அக்கறையுடனும், கவனத்துடனும் இந்தக் கட்டுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன. பாரதி கிருஷ்ணகுமார்