book

நேயர் விருப்பம்

Neyar viruppam

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கவிக்கோ அப்துல் ரகுமான்
பதிப்பகம் :நேஷனல் பப்ளிஷர்ஸ்
Publisher :National Publishers
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :96
பதிப்பு :14
ISBN :9789387854093
Add to Cart

இந்நூலிற்கு கவிஞர் மீரா எழுதிய அணிந்துரையில் “ஆழக் கடலில் மூழ்கவும் அண்ட வெளியில் பறக்கவும ஒரு சிலர்க்கே முடியும். அந்த ஒரு சிலருள் ஒருவர் அப்துல் ரகுமான். அவர் மரபுக் கவிதையையும் புதுக்கவிதையையும் ஒரு சேரத் தம் ஆளுகைக்கு உட்படுத்தியவர். முதன் முதலில் மரபில் புதுக்கவிதையின் போக்கையும் நோக்கையும் புகுத்தி வெற்றி கண்டவர். தமிழ்க் கவிதையில் சோதனை முயற்சிகள் அபூர்வம். இவரோ தொடர்ந்து சோதனையும் சோதனையில் சாதனையும் செய்திருப்பவர். செவி இன்பத்துக்குரிய கவிதைகளைக் கூடச் செய் நேர்த்தித் திறத்தால் அழியாச் சித்திரங்களாக்கும் மந்திர சக்தி மிக்கது இவரது எழுதுகோல். கவியரங்கத்தை நோக்கி இவரது பாதம் பட்ட பிறகுதான் ஒரு ராஜபாட்டை உருவானது. இன்று பலரும் அதில் பவனிவருகிறார்கள்” என்று கூறுகிறார்.