book

அநுபவ ஜோதிடம் இரண்டாம் பாகம்

Anubava Jodhidam - Part 2

₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நெல்லை பாபுஜி, எஸ். வெங்கட்ராமய்யங்கார்
பதிப்பகம் :ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ்
Publisher :Sri Indu Publications
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :192
பதிப்பு :17
Published on :2012
Add to Cart

இது 'அநுபவ ஜோதிட'த்தின் இரண்டாம் பாகம். பல்லாயிரம் ஜோதிடர்கள் உருவாகவும், ஜோதிடம் பற்றிய பல நூல்கள் வெளிவரவும் காரணமாக இருந்த இதன் முதல் பாகம் இதுவரை முப்பது பதிப்புகள் வெளி வந்துள்ளது என்பதையும் அதன் சிறப்பையும் அனைவரும் அறிவர். ஜோதிடம் கற்பவர்களிடையே அது ஒரு திருப்பு முனையாக அமைந்தது. முதல் பாகத்தை மட்டும் கற்றுணர்ந்த வாசகர்கள் ஜோதிடத்தில் மேலும் முன்னேறுவதற்காகவே இந்த இரண்டாம் பாகம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஜோதிடம் சம்பந்தப்பட்ட மேலும் நுணுக்கமான பல விஷயங்கள் இதில் சொல்லப்பட்டுள்ளன. கிரக ஸ்புடம், லக்கின ஸ்புடம், பாவச் சக்கர விவரம், பாவ பலன் விளக்கம், இலக்கின சோதனை, அஷ்டவர்க்கம், திரிகோண சோதனை, ஏகாதிபத்ய சோதனை, பின்னாட்டக வர்க்கம், சர்வாங்க அஷ்ட வர்க்கம், ராசி குணாகாரம், ராசி பிண்டம் போன்ற மிக நுணுக்கமான பல பெரிய விஷயங்கள். மிக எளிதாக விளக்கிச் சொல்லப்பட்டுள்ளன. மிகச் சிக்கலான விஷயங்கள்கூட புரியும்படி மிக எளிதாகச் சொல்லப்பட்டுள்ளதை நீங்களே உணர்வீர்கள். இப்புத்தகம் 1987ல் வெளிவந்து, பதினெட்டு பதிப்புகளைத் தாண்டி விற்றுக்கொண்டிருக்கிறது. 'அனுபவ ஜோதிடம்' மூன்றாம் பாகமும் சந்தையில் விற்பனையாகிறது.