book

விஜய நகரப் பேரரசு வரலாறு

Vijaya Nagara Perarasu varalaru

₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தஞ்சை நா. எத்திராஜ்
பதிப்பகம் :தேவி வெளியீடு
Publisher :Devi Veliyeedu
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :384
பதிப்பு :1
Published on :2012
Add to Cart

உலகில் பல பேரரசுகள் உருவாகிச் சீரும் சிறப் போடும் விளங்கிச் சரிந்து, மறைந்து மக்களால் மறக்கப்பட்டுள்ளன. அவ்வாறு விளங்கிய பேரரசுகளில் வடக்கே கிருஷ்ணா நதியிலிருந்து, தெற்கே கன்னியாகுமரி வரை பரவியிருந்த விஜயநகரப் பேரரசும் ஒன்று. சூரியனைப் போன்று பிரகாசித்த பல்லவ, சோழ, பாண்டியப் பேரரசுகளுக்கு இணையாகவே, விஜய நகரப் பேரரசும் திகழ்ந்தது. தமிழகத்தை ஆண்ட பல்லவ, சோழ, பாண்டிய மன்னர்களை அறிந்து கொண்டுள்ள அளவு, விஜய நகரப் பேரரசர்களைப் பற்றியும், அவர்கள் பிரதி நிதியாக அரசு புரிந்த தமிழக நாயக்க மன்னர்களைப் பற்றியும், மக்கள் நன்கு அறிந்திருக்கவில்லை. தஞ்சைப் பெரிய கோயிலில் கம்பீரமான தோற்றத்துடன் ஒரே கல்லாலான பெரிய நந்திச் சிலை, நந்தி மண்டபம், கலையழகோடு விஜய நகர பாணியில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆகியவை தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னர்களால் உருவாக்கப்பட்டவை என்பது அறியாது, இவை இராசராசனால் கட்டப்பட்டவை என்ற எண்ணத்துடனே பார்வையாளர்கள் பார்த்துச் செல்கின்றனர்.