book

யாரோ யாரோடி...

Yaaro Yaarodi

₹63₹70 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சித்ரா பாலா
பதிப்பகம் :தேவி வெளியீடு
Publisher :Devi Veliyeedu
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :200
பதிப்பு :2
Published on :2012
Add to Cart

'அம்மாமுன்னாடி எப்படிக்கா பேசறது, நான்மாட்டேம்பா!" அழகாக வளர்த்து மெடிக்கூர் செய்து பாலிஷில் பளபளத்த தன் விரல் நகங்களைப் பார்த்து ரசித்துக் கொண்டே கேட்டாள் பிரணத்தி. '“ச்ச்சோ... பிரணா, இந்தக் காலத்துப் பொண்ணு மாதிரி கொஞ்சம் பிகேவ் பண்ணேன். வருண் ஒரு வாரம் முன்னால் போன் செஞ்சப்ப பேச விட்டாயா? அப்பா பக்கத்திலே உட்கார்ந்து பேப்பர் வாசிச்சுகிட்டிருந்தாங்க. அதனால், 'நான் வருண் பேசறேன்...' என்று சொன்னவுடன், போனை நீ வைச்சாச்சுன்னு சொன்னே. அவன் என்ன நினைப்பான்." "அக்கா! நிஜம்மா சொல்லட்டா... ஏன்னா, எனக்குப் பயமா இருக்கு. இந்தப் போன்ல பேசற வேலையே வேண்டாம்னு சொல்லிடேன் அவர்கிட்டே!" கெஞ்சினாள் பிரணத்தி.