book

நீயில்லாமல் நானும் நானல்ல

Neeyillaamal Naanum Naanalla

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆர். மகேஸ்வரி
பதிப்பகம் :இராமு நிலையம்
Publisher :Devi Veliyeedu
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :128
பதிப்பு :1
Published on :2012
Add to Cart

வர்த்தக உலகில் கொடி கட்டிப் பறக்கும் பெரிய பிசினஸ்மேன். நிரம்ப கற்றவன். சாமர்த்தியமானவன். இந்த மூன்றாண்டுகளில் தந்தையின் தொழில்களை அமோகமாய் முன்னேற்றிய தந்திரசாலி. ஆறடிக்குக் குறையாத உயரமும், சந்தன மேனியும்... பரந்து விரிந்த தோளும் அழகிய முகத்தில் இன்னும் அழகுக்கு அழகு சேர்க்கும் அந்த அடர்ந்த கரிய மீசையும், சிரிக்காமலேயே சிரிப்பது போல தோற்றமளிக்கும் உதடுகளும், காஷ்மீர் கண்களுமாய் இருக்கும் அவனைப் பார்க்கும் எந்த பெண்களும் ஏக்கப் பெருமூச்சு விட்டு திரும்பத் திரும்ப பாராமல் போக மாட்டார்கள். அப்படி இருக்கும் அழகு தேவன், இன்று கூனி குறுகி ஒளியிழந்த முகத்துடன் தனது இயலாமையை மறைக்க ரத்தமென சிவந்த கண்களுமாய் அவன் அசோக வனத்தில் சீதைக்கு பதில்... ராமன் இருந்திருந்தால் எப்படியிருக்குமோ அதைப்போல அமர்ந்திருந்தான்.