book

தென்றல் வந்து என்னைச் சுடும்

Thendral Vandhu Ennai Sudum

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆர். மணிமாலா
பதிப்பகம் :தேவி வெளியீடு
Publisher :Devi Veliyeedu
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :272
பதிப்பு :1
Published on :2012
Add to Cart

பனி இன்னும் முழுதாய் விடைபெறவில்லை. காற்றில் குளிர் மிச்சமிருந்தது என்றாலும் சிவரஞ்ச னியின் முகத்தில் பனித்துளிகளாய் வியர்வை ஒட்டியிருந்தது. "எழுபத்தெட்டு எழுபத்தொன்பது. எண்பது..." - மூச்சு .. வாங்க எண்ணிக்கொண்டே ஸ்கிப்பிங் பண்ணிக் கொண்டிருந்தாள். அவள் எகிறி எகிறிக் குதிக்கும் அழகை எந்த இளைஞனாவது பார்த்தால்... சீக்கிரமாகவே பிரஷர் வந்து செத்துப் போய்விடுவான். அப்படியொரு இளம் சிட்டுதான் சிவரஞ்சனி! பதினேழு வயது செழுமையை உடல் முழுக்க வஞ்சனை யின்றி அப்பியிருந்தான் பிரம்மன். உடைத்த கோதுமை நிறம். இடுப்புவரை அடர்ந்திருந்த தலைமுடி. எந்த ஹேர் ஸ்டைலுக்கும் பணிந்து விடும் நேர்த்தி! ஒப்பனை அவசியமில்லாத. பியூட்டி பார்லரின் உதவி தேவைப்படாத இயற்கை அழகு! முகத்தில் இன்னமும் பால் மணம் மிச்சமிருந்தது.