book

தியாய் வந்த தென்றல்

Theeyaai Vandha Thendral

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆர். மகேஸ்வரி
பதிப்பகம் :சசி நிலையம்
Publisher :Devi Veliyeedu
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :136
பதிப்பு :1
Published on :2012
Out of Stock
Add to Alert List

மார்கழி மாதம்!

பனியின் தாலாட்டில் உறங்கிக் கொண்டிருந்த நகரம்... மெல்ல மெல்ல விழித்து... சூரியனின் வருகைக்காக வழி மேல் விழி வைத்து காத்திருந்த காலைப் பொழுது! அந்தப் பனி படர்ந்த வேளையில் மாடியில் ஓடினான் கவுதம். கொஞ்ச நேர ஓட்டம் முடிந்து... வழக்கமான உடற்பயிற்சிகளை எல்லாம் முடித்து... வியர்வை காய நாற்காலியில் அமர்ந்தான். தோட்டத்தில் மலர்ந்திருந்த விதவிதமான ரோஜாக்களின் நறுமணமும்...  முல்லை, மல்லிகையின் மணமும் போட்டி போட்டு அவன் நாசியைத் தாக்கின.