book

சூரிய தாகங்கள்

Suriya Dhaagangal

₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆர். மணிமாலா
பதிப்பகம் :சசி நிலையம்
Publisher :Devi Veliyeedu
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :288
பதிப்பு :1
Published on :2012
Add to Cart

"நானும் அதே ட்ரெயின்ல, அதே கம்பார்ட்மென்ட்லதான் வந்தேன். யாரோ தீவிரவாதி தண்டவாளத்துல பாம் வச்சிட்டிருக்கான். இருநூறு பேர் இறந்திட்டாங்க. கடைசியில் இருந்ததால் நாம் பிழைச்சிக்கிட்டோம். எனக்குக் கால்ல மட்டும்தான் லேசா அடி. உங்களுக்கு நெத்தியில, நாலு ஸ்டிட்ச் போடற அளவுக்கு. கவர்ன்மென்ட் டாக்டர்ஸ் விபத்துல அடிபட்டவங்களுக்கு சிகிச்சை தந்துக்கிட்ருக்காங்க. நிறையப் பேருக்கு படுக்கக் கூட இடமில்லாம தரையில் துணியை விரிச்சி... மோசமா ட்ரீட்மென்ட் தர்றாங்க. இடிபாடுகள்ல சிக்கியிருந்த உங்களை நான் மீட்டப்ப காயம் அதிகம் இல்லேங்கறதால நானே ஆட்டோவுல தூக்கி, பிரைவேட் ஹாஸ்பிடலுக்கு வந்துட்டேன். ரெண்டு மணி நேரத்துல என் வீட்டுக்கும் அழைச்சிட்டு வந்துட்டேன். வலி தெரியாம இருக்க தூங்கறதுக்கு ஊசி போட்டாங்க. அதனால் தான் கண் விழிக்க நேரமாய்டுச்சு. எனவே தப்பா இருந்தா மன்னிச்சிடுங்க!'' பொறுமையாய், கனிவாய் அவன் பேசி முடித்தபோது... வசீகரமாய்த் தெரிந்த அவனின் முகம் அவளை ஈர்த்தது. ''மன்னிக்கறதா? என்னைக் காப்பாத்திக் கொண்டு வந்திருக்கீங்க... அதுக்காக... நான் உங்களுக்கு நன்றிக் கடன்பட்டிருக்கேன்."