book

சுட்டும் விழிச்சுடரே

Suttum Vizhi Sudare

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆர். மணிமாலா
பதிப்பகம் :தேவி வெளியீடு
Publisher :Devi Veliyeedu
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :216
பதிப்பு :1
Published on :2012
Out of Stock
Add to Alert List

தாயின் கருவறைக்குள் இருக்கும் குழந்தை பூமித் தாயின் புத்தம் புது வெளிச்சத்தைக் காண காத்திருப்பது போல... பின்னிரவின் இருட்டு அதிகாலையைக் காண ஆவலோடு காத்திருந்தது. கனரக வாகனங்களின் சத்தமும், பால்காரப் பையனின் சைக்கிள் மணியோசையும், ராகமிழுத்து ஓலமிட்ட நாயின் குரைப்பும் தவிர வேறெந்த சப்தமுமின்றி, மக்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். காஞ்சனாதேவிக்கு மட்டும் உறக்கம் வஞ்சித்திருந்தது. ‘எப்போதடா விடியும்' என்று கொட்டக் கொட்ட விழித்திருந்தாள்.கட்டிலைச் சுற்றி அரவணைத்திருந்த மிகப்பெரிய கொசுவலையை விலக்கி எழுந்தாள். லேசாய் வாய் பிளந்து, மிகுதா லேசாய் வாய் பிளந்து, மிதமான குறட்டையோடு, சற்றே மேடிட்டிருந்த வயிறு ஏறி இறங்க... நல்ல தூக்கத்திலிருந்தார் பாலகிருஷ்ணன். காஞ்சனா பால்கனிக் கதவைத் திறந்து வந்து நின்றாள். முன்தினம் பெய்த மழையின் குளிர்ச்சி காற்றில் நீக்கமற நிறைந்திருந்தது. கைகளை இறுகக் கட்டிக் கொண்டு, மூச்சை உள்ளிழுத்து கன்னிக் காற்றை சுவாசித்தாள். சாலையில் முப்பது வய தொத்த பெண்ணொருத்தி, சைக்கிள் காரியரில் மூலிகைச் சாறுகளை எடுத்துக் கொண்டு கடற்கரைக்குச் செல்வது சோடியம் விளக்கின் ஒளியில் தெரிந்தது. உறக்கம் வராத பல சமயங்களில் காஞ்சனா இதுபோல் வந்து நிற்கும்போதெல்லாம் அப்பெண்ணின் கண்களில் விழுவதுண்டு. நேரம் காலம் பார்க்காத உழைப்பைக் கண்டு வியப்பதுடன் மனதிற்குள் வாழ்த்தவும் செய்வாள். மாடியில் இருந்தபடியே கீழேப் பார்வையை ஓடவிட்டாள்.