book

ஒரு மலரின் பயணம்

Oru Malarin Payanam

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆர். மணிமாலா
பதிப்பகம் :தேவி வெளியீடு
Publisher :Devi Veliyeedu
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :328
பதிப்பு :1
Published on :2012
Add to Cart

மழை சீறலாய் பூமியை குதறிக் கொண்டிருந்தது. கார் வைப்பர் தண்ணீரை இப்படியும் அப்படியும் தள்ளி விட்டும் விடாப் பிடியாய் மறுபடி நனைத்துக் கொண்டிருந்ததை குதூகலம் கொப்பளிக்க பார்த்துக் கொண்டிருந் தாள் சௌம்யா! ஆவலில் கண்கள் விரிய. பூஞ்சிரிப்பில் உதடு பிளந்து பற்கள் மின்ன...வெளியே கையை நீட்டினாள். மழை முத்துக்கள் ஒரு கையளவு சேர்ந்ததும் அதை அப்படியே பக்கத்திலிருந்த மிருதுளா மீது விசிறி அடித்தாள். "ஏய்...." என்ற செல்லக் கோபத்தோடு சௌமியின் தொடையில் "என்ன சௌமி விளையாட்டு இது? போதும் வண்டிய எடு! டைமாகுது... டிக்கெட் கிடைக்காமப் போயிடும். அப்புறம் கிளாசை கட் அடிச்சதுக்கு எந்த பலனும் இல்லாமப் போயிடும்" பின் சீட்டிலிருந்த செலின் கெஞ்சலாய் கேட்க..."பிக்சர் போயே ஆகணுமா? அதோ பார்! மழை எவ்ளோ அழகா பெய்யுது! இந்த நேரத்துல பீச்சுக்குப் போனா எப்படியிருக்கும்?''