உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
Unnidaththil Ennai Koduththen
₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆர். மணிமாலா
பதிப்பகம் :இராமு நிலையம்
Publisher :Devi Veliyeedu
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :240
பதிப்பு :1
Published on :2008
Add to Cartபேருந்து பல்லவன் இல்லத்தை தாண்டி வளைந்து சென்டிரல் நோக்கி ஊர்ந்தது. அபர்ணா பரபரப்பானாள். அவளுக்குப் பிடித்தமான இடம் நெருங்கிக் கொண்டிருந்தது. அது... கல்லறை! நேற்றைய மனிதர்கள் உறங்கிக் கொண்டிருந்த இடம். அதற்காக அபர்ணாவிற்குப் பிடித்த இடம் இந்த கல்லறை தான் என்று நினைத்து விடக்கூடாது. அந்தக் கல்லறைக்கு மேலே கொஞ்சம் பார்வையை உயர்த்தினால்... தெரியும். தொலைதூரத்தில் உயர உயர் மாய் தலையாட்டும் பலவகை மரங்களினூடே இரண்டு தென்னை மரங்கள்! பரந்து விரிந்த வானம்! கிளை பரப்பியிருந்த மேகங்கள்... மலைமுகடுகளைப் போல் எழும்பியிருக்க, அதன் இடையில் கொஞ்சம் கொஞ்சமாய் அமிழ்ந்துக் கொண்டிருக்கும் சூரியன், முக்கால்வாசி மறைந்து கொஞ்சமாய் தலைக்காட்டிக் கொண்டிருக்கும் அந்த அழகைக் காணும் போதெல்லாம்... பரவசமாகி விடுவாள் அபர்ணா! ஆபீஸ் முடிந்து, தினசரி பஸ்சில் வருகையில் அந்தக் காட்சியைக் கண்டு விடுவாள். ஆனால் இன்று பஸ் கொஞ்சம் தாமதம்! சூரியன் முழுசாய் டாட்டா காட்டி மறைந்து அபர்ணாவிற்கு கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது. பெருமூச்சுவிட்டபடி பார்வையை திருப்பிக் கொண் டாள். பஸ் சிக்னலில் நின்றது. உள்ளிருந்தக் கூட்டம் திமுதிமுவென்று அடித்துப் பிடித்து இறங்கியது. அபர் ணாவும் அவர்களோடு இறங்கி... ரெயிலைப் பிடிக்க... அவசர கதியில் நடையை எட்டிப் போட்டாள்.