
இனிமையான எழுபது கதைகள்
Inimaiyana Ezhubathu Kadhaigal
₹110+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :உலகம்மா
பதிப்பகம் :தேவி வெளியீடு
Publisher :Devi Veliyeedu
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :296
பதிப்பு :1
Published on :2012
Add to Cartஇனிமையான எழுபது கதைகள்! இக்கதைத் தொகுப்பில் இடம் பெற்று இருக்கின்ற எல்லாக் கதைகளும் இனிமையானவை என்பது என் நம்பிக்கை.
கருப்புக்கோட்டை சிவன் கோயிலின் முன்பு உள்ள ஒரு வயலில் கொக்கு ஒன்று ஒற்றைக்காலில் நின்று சிவபெருமானை நோக்கித் தவம் செய்து கொண்டு நின்றது
அப்பொழுது இறைவன் இந்தக் கொக்கின் தவம் கண்டு இரங்கி மேல் இருந்து கீழே வந்து அதன் அருகில்போய்,
'கொக்கே! நீ என்னை நோக்கிச் செய்கின்ற தவத்தின் நோக்கம் என்ன? என்று கேட்டார்.
கொக்கு இறைவனை வணங்கி-
'இறைவா! நான் செய்யும் தவத்தின் நோக்கம். எனக்கு அடுத்த பிறவி என்று ஒன்று உண்டு என்றால். அப்பிறவியில் நான் மானுடப் பிறவி ஆகப் பிறக்க ஆசைப்படுகிறேன். அதற்காகவே நான் தங்களை நோக்கித் தவம் இயற்றினேன். இதுவே என் தவத்தின் நோக்கம்!' என்றது.
