book

அழகே உன்னை ஆராதிக்கிறேன்

Azhage Unnai Aaraadhikiren

₹85+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆர். மணிமாலா
பதிப்பகம் :இராமு நிலையம்
Publisher :Devi Veliyeedu
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :336
பதிப்பு :1
Published on :2012
Add to Cart

ஒருவேளை...அவளுக்கு உடல் நலமில்லையோ? ஆனால், இதுவரை அப்படி ஆரோக்கிய கேடு என்று படுத்தவளில்லையே? அதுசரி... மனுசனாப் பொறந்தா.. உடல்நலமில்லையென்று கூடவா படுக்கமாட்டார்கள்? ஒருநாள் இல்லையென்றால் ஒரு நாள் படுக்க மாட்டார்களா?' ஒருபுறம் மனம் கேலி பண்ணியது. ஆனாலும் அந்த சமாதானத்தை அவன் மூளை ஏற்றுக்கொள்ளவில்லை. 'வேறு ஏதாவது காரணமாயிருக்குமோ? ஒருவேளை அவளை பெண் பார்க்க யாரேனும்...?' அப்படி நினைத்தமாத்திரத்தில் உடம்பு ஒருமுறை விலுக்கென்று அதிர்ந்தது. கடவுளே... அப்படி மட்டும் ஏதும் நடந்துவிடக்கூடாது. அவள் காய்ச்சல் என்று பத்து நாள் படுத்தால் கூடப் பரவாயில்லை. பெண் பார்க்கிறேன் என்று மட்டும் எவனும் என்னவளை பார்க்கக்கூடாது!' அவன் காதல் இதயம் அவசரமாய் கடவுளிடம் விண்ணப்பித்தது.பலதையும் நினைத்துக் குழம்பியதில் இதயம் படக் படக் என்று அடித்துக் கொண்டது. சில்லென்று குளிர்ந்த நீரை தொண்டைக்குள் சரித்துக் கொண்டு ஆசுவாசப்படுத்தியவன் மேசை மேலிருந்த அழைப்பு மணிக்கான சுவிட்சை அழுத்தினான். அடுத்த இரண்டாவது விநாடியில் வேலன் அங்கு நின்றிருந்தான். வேலன்-ஆபீஸ்பாய்! ''குட்மார்னிங் சார்!'' "ம்...ம்... ஆபீசுக்கு எல்லாரும் வந்தாச்சா!''