book

ஈழத்தின் புதிய தமிழ்க் கவிதைகள்

Eezhaththin Pudhiya Thamizh kavidhaigal

₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தமிழவன்
பதிப்பகம் :காவ்யா பதிப்பகம்
Publisher :Kavya Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :297
பதிப்பு :1
Published on :2012
Add to Cart

"ஈழத்தின் புதிய தமிழ்க் கவிதைகள்'' என்ற பெயரில் வெளியாகும் இந்தத் தொகுப்புப் பிறந்த கதை பற்றிச் சொல்ல வேண்டும்.
கன்னடமொழியில் ஈழக்கவிதை தொகுப்பு என்று நானும், எனது கன்னட மாணவர்கள் - இப்போது இவர்கள் பல்கலைக்கழக, மற்றும் கல்லூரி ஆசிரியர்களாக உள்ளனர் சிலரும் சேர்ந்து கொண்டுவரத் திட்டமிட்டோம். அத்தொகுப்பு பற்றி அதன் வெளியீட்டு விழாவில் கன்னட கவிஞர்களும் விமர்சகர்களும் வெளிப்படுத்திய கருத்துக்கள் என் எதிர்பார்ப்பையும் இக்கவிதைகளின் உலகத்தரம் பற்றிய என் கணிப்பையும் மீறி அமைந்தன. 1983 - லிருந்தே ஈழக்கவிதைகள் புதுதிசையில் நடையிடுகின்றன என்று அன்று நான் அங்கம் வகித்த 'படிகள்' போன்ற சிற்றிதழ்களில் குறிப்பிட்டிருந்தேன். தொடர்ந்து ஈழக்கவிதைகள் பற்றி அறிந்து கொள்ள இயன்ற காரியங்களைச் செய்து வந்தேன். இடையில் கொஞ்ச காலம் ஈழக்கவிதைகள் பற்றிய அறிமுகம் எனக்குக் கிடைத்திருக்கவில்லை . வ.ஐ.ச. ஜெயபாலன், சேரன், இளவாலை விஜயேந்திரன் போன்ற புதுத் தலைமுறை பற்றிக் கவனித்து எழுதிய எனக்கு இடையில் சோலைக்கிளி, நட்சத்திரன் செவ்விந்தியன் போன்றோரின் வரவு தெரியாமல் இருந்தது. தொகுப்புக்காக வேண்டிய நூல்களையும் இதழ்களையும் சேகரிக்க நண்பர்களைத் தொடர்பு கொண்டபோது புது வகைக் கவிஞர்கள் உருவாகி வருவது தெரிந்தது.