ஆலயம் அழிவது சாலவும் நன்று
Aalayam Azhivathu Saalavum Nandru
₹220+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஈரோடு அறிவுக்கன்பன்
பதிப்பகம் :காவ்யா பதிப்பகம்
Publisher :Kavya Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :261
பதிப்பு :1
Published on :2012
Add to Cart"ஆலயம் தொழுவது சாலவும் நன்று” என அவ்வையார் என்ற பெண்பாற் புலவர்
கூறிச்சென்றார். அவர் பொதுவாக ஆலயம் தொழுவது மிகவும் நல்லது என்று
கூறியுள்ளார். ஆனால் என்ன நல்லது; ஆலயம் தொழுததால் என்னென்ன நன்மைகள்
ஏற்பட்டிருக்கின்றன; இனி தொழுவதால் என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்று
குறிப்பாகக் கூறினாரில்லை.
ஆலயம் என்பது வடசொல். அதற்குத் தமிழில் கோயில் என்பர். கோயில் என்பது கடவுள் உறையுமிடம், கடவுளை வணங்குமிடம் என்று கூறப்படுகிறது. கடவுள், கோயில் என்ற சொற்கள் பண்டைய தமிழ் நூல்களாகிய தொல்காப்பியம் மற்றும் சங்க நூல்களில் காணப்படவில்லை. எனவே பண்டைத் தமிழர்கட்குக் கடவுளோ, கோயிலோ இல்லை என்பது உறுதியாகிறது. திருக்குறளில் உள்ள முதல் அதிகாரம் கடவுள் வாழ்த்து என்றுள்ளது. ஆனால் அதில் உள்ள பத்துக் குறள்களில் ஒரு குறளில் கூட கடவுள் என்ற சொல் எடுத்தாளப்படவில்லை. திருக்குறளில் காணப்படும் கடவுள் வாழ்த்தும் சமயக் கருத்துக்களை விளக்கும் இயற்கைக்கு மாறான பிற அதிகாரங்களும் திருவள்ளுவரால் இயற்றப்படாத இடைச்செருகல்கள் என்பது அறிஞர் கண்ட முடிபாகும்.