மும்பை குற்றத் தலைநகரம்
Mumbai: Kuttra Thalainagaram
₹215+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கிழக்கு குழுவினர்
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :அரசியல்
பக்கங்கள் :182
பதிப்பு :1
Published on :2006
ISBN :9788183682459
குறிச்சொற்கள் :சரித்திரம், பிரச்சினை, குண்டுவெடிப்பு, வழக்கு, நிஜம்
Add to Cart12/3/1993, 11/7/2006 - மும்பையை மட்டுமல்ல, இந்தியாவையே அதிர வைத்த இரண்டு நாள்கள். இந்த இரண்டு நாள்களிலும் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்புகள் மும்பை, இந்தியாவின் தீவிரவாதத் தலைநகரமாகி வருகிறதா என்ற சந்தேகத்தை வேரூன்றியது.
இந்தியாவின் பொருளாதாரத் தலைநகராக விளங்கிய மும்பை, இருளாதாரத்துடன் நடக்கும் குற்றங்களின் தலைநகராக மாறியது எப்படி? ஊசிப் பட்டாசு கொளுத்திப் போடுவதுபோல், பயங்கரவாதிகள் வெகு அநாயாசமாக ஆர்.டி.எக்ஸ். வைக்கும் பட்டணமாக மும்பை மாறியது ஏன்? நியூ யார்க்குக்குப் பின், தீவிரவாதிகளின் எளிய இலக்காக மும்பை நகரை சர்வதேச தீவிரவாதப் பருந்துகள் வட்டமிடுவதன் பின்னணி என்ன?
கரீம் லாலா, ஹாஜி மஸ்தான், வரதராஜ முதலியாரில் ஆரம்பித்து தாவூத் இப்ராஹிம், அபு சலீம் என்று தொடரும் தாதாக்கள் மும்பையை என்ன விதமாக மாற்றி இருக்கிறார்கள்? நிழல் உலக தாதாக்களுக்கும், மும்பை சினிமா நட்சத்திரங்களுக்கும் உள்ள உறவின் உண்மை நிலவரம் என்ன?
இந்நூல் மும்பையின் கருப்புப் பக்கங்களை முழுதாக உரித்துக் காட்டும் மிரட்டல் ஸ்கேன ரிப்போர்ட். மும்பை, இந்தியா, உலகம் என்று பரந்து விரிந்து மிரட்டும் தீவிரவாத வலையைப் புரிந்து கொள்ள மிகவும் உதவும்.