book

பொற்குவியல் புதையல் 8 ம் பாகம்

Porkuvial Puthaiyal Part-8

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :Chinnakkuthusi
பதிப்பகம் :நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
Publisher :Nakkheeran Publications
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :144
பதிப்பு :1
Published on :2011
Add to Cart

அரசியல் என்பது பல வண்ணங்கள் கலந்தது. அதில் வர்க்க, ஜாதி அடிப்படைகள் உட்பட பல்வேறு கூறுகளை அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளக் கூடிய மொழியில் பிரித்துக்காட்டும் நிகழ்கால நிறப்பிரிகைதான் சின்னக்குத்தூசி. இன்றைய பத்திரிகை உலகில் இவரைப்போல் வேறு ஒருவர் கிடையாது என்று சில வருடங்களுக்கு முன் ஒரு மூத்த பத்திரிகை ஆசிரியர் கருத்து தெரிவித்தார். அதை நான் உடனடியாக மறுத்தேன். இன்றைய பத்திரிகை உலகில் மட்டுமல்ல... எந்தக் காலத்திலும் இதுபோன்ற ஒரு அரிய, உயர்ந்த மனிதப்பண்புகளை உடைய, வள்ளல்போல் தன்னுடைய அறிவையும் ஆற்றலையும் மற்றவர்களுடன் பங்கு போட்டுக்கொள்ளத் தயங்காத, ஒரு வாராது வந்த மாமணியை நம்மால் காணமுடியாது.
இந்தத் தொகுப்பு தமிழகத்தின் மிகவும் முக்கியமான ஒரு காலகட்டத்தின் பதிவு. 1989 முதல் 1991 வரையில் நடைபெற்ற நிகழ்வுகளின் விமர்சனம்தான் இது. வி.பி.சிங் மண்டல் அறிக்கையை நடைமுறைப்படுத்தியது, பாரதியஜனதா கட்சியின் வளர்ச்சி, ஜெயலலிதாவின் அரசியலின் ஆரம்பகால கோணல்கள், எதிர்காலம் முற்றிலும் கோணலாகப் போகப்போகிறதைப் பதிவு செய்யும் நேர்த்தி ஆகியவையே இதன் முக்கிய அம்சங்கள். இந்தப் புதையலில் குளிப்பவர்கள் அனைவரும் முத்துக்களோடுதான் வருவார்கள் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை.