book

சொல்லாததும் உண்மை

Solathathum unmai

₹115+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பிரகாஷ்ராஜ்
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :சினிமா
பக்கங்கள் :225
பதிப்பு :4
Published on :2009
ISBN :9788189936877
குறிச்சொற்கள் :திரைப்படம், நடிகர், அனுபவங்கள், சரித்திரம்
Out of Stock
Add to Alert List

காலத்தை ஒரு புகைப்படமாக்கி, அதில் கண்ணீரையும் புன்னகையையும் உறைய வைப்பவனே உன்னதக் கலைஞன். அந்த உன்னதத்தை நோக்கி உயர்ந்துகொண்டே இருக்கிற கலைஞன் ‍ பிரகாஷ்ராஜ்.

கர்நாடகத்தின் நடுத்தரக் குடும்பமொன்றில் பிறந்தவர். வாழ்க்கை தரும் வலிகளையே உளிகளாக்கி, தன்னைத்தானே செதுக்கி எழுந்து வந்ததால், இன்று தென்னிந்தியா கொண்டாடுகிற திரைப்படக் கலைஞன். பரபரப்பான நடிகர், புதியன தேடும் தயாரிப்பாளர் என்பது ஒரு பக்கம், சிந்தனையில் சிறகு கட்டும் ரசனைக்காரர், இலக்கிய ஆர்வலர் என்பது இதமான மறுபக்கம்.

தேடித் தேடிச் சேர்த்த அனுபவமும், இன்னுமின்னும் தீராத தேடலுமாக, சமூகத்தின் சகல திசைகளையும் தரிசித்த, தரிசிக்கத் துடிக்கிற மனசுதான் அவரது அடையாளம். நடந்த பாதையை, கடந்த பயணத்தை, நம்மை நண்பர்களாக்கி பிரகாஷ்ராஜ் பகிர்ந்துகொண்டதே இந்த சொல்லாததும் உண்மை!

அதிர வைத்து, நெகிழ வைத்து நிர்வாணமாகி நிற்கும் உண்மைகள்! உலகமெலாம் நிறைந்து கிடப்பதும், உலகமே தேடிக் கொண்டிருப்பதுவும் ஒன்றுதானே... அது உண்மைதானே!

ஆனந்த விகடனின் வெற்றித் தொடர்களில் ஒன்றான இது புத்தக வடிவில் ...