ஆரோக்கியம் 500
Arokiyam 500
₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சபீதா ஜோசப்
பதிப்பகம் :சாருபிரபா பப்ளிகேஷன்ஸ்
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :72
பதிப்பு :5
Published on :2012
Add to Cartமனித உடலுக்குத் தானே நோயைக் குணப்படுத்திக் கொள்ளும் ஆற்றலும் உண்டு. அந்த
ஆற்றலை மிகுதிப்படுத்திக் கொள்ள உதவுவது ‘பட்டினி மருத்துவம்!' வாரத்தின்
ஆறு நாட்கள் நம் உண்ணும் உணவுகள், நச்சுப் பொருட்கள் ஏழாவது நாள்
பட்டினியின்போது சிறுநீரகம், குடல், நுரையீரல், தோல் வழியே வெளியேறுகின்றன.
ஆக பசியும் ஒரு மருந்துதான். சுத்தமான காற்றும் ஒரு மருந்துதான். நல்ல
தண்ணீரும் ஒரு மருந்துதான். நல்ல தூக்கமும் ஒரு மருந்துதான். வெயிலும் ஒரு
மருந்துதான். வேப்பமர நிழலும் ஒரு மருந்துதான். இசையும் ஒரு மருந்துதான்.
புணர்ச்சியும் ஒரு மருந்துதான். முத்தமும் ஒரு மருந்துதான். 'எனக்குத்
தலைவலி ஏற்பட்டால் மாத்திரைப் போடமாட்டேன். ஒரு பத்து நிமிடம் தூங்கி
எழுந்தாலே போதும். மறுபடியும் ஃபிரஷ் ஆகிவிடுவேன்.இது என் நண்பரின்
அனுபவம். டென்ஷனாக இருந்தால் வெளியே சென்று காற்று வாங்குங்கள், பசுமையான
மரம், செடிகளைப் பாருங்கள் அல்லது வீட்டிலுள்ள மீன் தொட்டியைப் பாருங்கள்
டென்ஷன் போகும். டென்ஷனும் ஒரு நோய்தானே! இந்தத் தொகுப்பில் உள்ள
ஆரோக்கியத் தகவல்கள் அத்தனையும் அதிக செலவில்லாதது. எளிமையானது.