book

கோபுர சாபம்

Kobura Sabam

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர்.மா.பா. குருசாமி
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :252
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788123413099
Add to Cart

கோயில் திருப்பணிக்காக  ஒரு சிலர் மக்களிடம் வற்புறுத்திப் பொருள் பெற்றும் ஏழைகளின் நிலத்தைப் பறித்தும், தடையாக இருந்தவர்களைக் கொன்றும் அரசனுக்குப் பழியுண்டாக்க வேண்டி செய்த கொடுஞ் செயல்களால் உடைமைகளையும் உறவினர்களையும் இழந்த முதுமகள் ஒருத்தி தலைவிரி கோலமாக அழுது அரற்றி வந்து, கோயிலுக்கு வந்திருந்த அரசனுக்கு நேர்நின்று வஞ்சினம் கூறிய காட்சிகளை ஆசிரியர் தன் சொல்லாற்றலால் படம்பிடித்துக் காட்டியுள்ளமை பாராட்டற்குரியது.

முனைவர் மா.பா. குருசாமி அவர்கள் வரலாற்று நிகழ்ச்சிகளை அடிப்படையாக்க்கொண்டு வரையறை மீறாது கற்பனை ஆற்றலுடன் புதினம் படைப்பதில் வெற்றி கண்டுள்ளார்.

கோபுர தீபம், கோபுரக் கலசம்,கோபுர தரிசனம் என்றே வழங்கிப் பழகிய நாம் 'கோபுர சாபம்' என்ற நூலைக் காணும்போது இப்புதினத்தை உடனே படித்தாக வேண்டும் என்ற ஆர்வம் மேலெழுகின்றது.  ஆசிரியரின் பல்துறை ஆற்றலைப் போற்றி அவரை ஊக்குவிக்கும் வண்ணம் எமது பதிப்பகம் இந்நூலைப் பெருமையுடன் வெளியிடுகின்றது.

பதிப்பகத்தார்