book

ரகுபதி ராகவ

Ragupathi ragava

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மகாத்மா காந்தி, ராஜாஜி
பதிப்பகம் :வானதி பதிப்பகம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :246
பதிப்பு :2
Published on :2012
Add to Cart

எத்தனையோ அறிஞர் பெருமக்களின் நூல்களை வெளியிட்டுள்ள வானதி பதிப்பகம், ராஜாஜி எழுதியவற்றையும் பெருமிதத்தோடு பிரசுரித்துள்ளது. அவற்றுள் இந்த 'ரகுபதி ராகவ’ புத்தகம் சிறப்பிடம் பெறுகிறது. காரணம், இதில் காந்திஜியின் சிந்தனை களுக்கு ராஜாஜி தமிழ் வடிவம் தந்திருக்கிறார். எழுதிய இருவரும் பாரத நாட்டின் தவப்புதல்வர்கள். எழுதப்பட்ட விஷயமோ இறை அனுபவம் பற்றியது. எனவே, மும்மடங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. "நாட்டுக்காக நான் ஆற்றியுள்ள பல பணிகளில் ராமாயணத்தையும் மகாபாரதத்தையும் எளிய தமிழில் எழுதியதையே மிக முக்கியமானதாகக் கருதுகிறேன்" என்று ராஜாஜி குறிப்பிட்டிருக்கிறார். “அவற்றுடன் இந்த ‘ரகுபதி ராகவ' நூலையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்" என்று சொன்னால் அது ராஜாஜியின் கருத்துக்கு விரோதமாகப் பேசுவதாகாது. ராமனையும் கண்ணனையும் கோயில்களில் வழிபடுகிறோம். வீட்டில் பூஜை அறையில் படங்களை வைத்து தினமும் மலர் தூவி வணங்குகிறோம். கண்ணால் அத்தெய்வங்களை நாம் கண்டதில்லை. தவயோகத்தால் காணக்கூடிய ஆற்றலும் நமக்கில்லை.