book

சீவனாம்ச சட்டங்கள்

Seevanaam Sattangal

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :புலமை வேங்கடாசலம்
பதிப்பகம் :தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
Publisher :Tamarai publications (p) ltd
புத்தக வகை :சட்டம்
பக்கங்கள் :136
பதிப்பு :2
Published on :2007
Add to Cart

திருமணம் என்பது பெண்ணொருத்தியுடன் காமுறு புணர்ச்சியை மேற்கொள்வதற்காக மட்டும் செய்து கொள்ளப்படுகின்ற ஒன்றன்று. குழந்தைகள் என்பது மனைவியுடன் சல்லாபங்களில் ஈடுபடுவதால் எதிர்பாராமல் ஏற்படுகின்ற விபத்துக்களன்று பெற்றோர் என்போர் பிள்ளைகளைப் பெற்று வளர்த்து ஆளாக்கிய பின்னர், மூலையிலே கழுவி கவிழ்த்து வைக்கப்படுகின்ற பழைய பாத்திரங்களன்று.

 மனைவி, குழந்தைகள், பெற்றோர் என்போர் ஆடவன் ஒருவனைச் சார்ந்திருக்கின்ற நபர்கள் ஆவர். அவர்களை ஆடவன் ஒருவன், உணவு, உடை, உறையுள் அளித்துப் பராமரிப்பது அவசியமாகும்.
 
 ஆடவன் ஒருவன் எந்தெந்தச் சூழ்நிலைகளில் தனது மனைவி, குழந்தைகள், பெற்றொர்க்குச் சீவனாம்சம் அளிக்க வேண்டும் என்பது பற்றியும். அவன் அவ்வாறு சீவனாம்சம் அளிக்கவில்லையேல் அவனது சொத்துக்கள் பற்றுகை ( ஜப்தி) செய்யப்படுவது எவ்வாறு என்பது பற்றியும், அவனுக்குச் சிறைத் தண்டனை அளிக்கப்படுவது எவ்வாறு என்பது பற்றியும் இந்நூல் விளக்கியுரைக்கிறது.