மனதின் ஓசைகள்
Manathin oosaigal
₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜென்ராம்
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :அரசியல்
பக்கங்கள் :222
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788189936204
குறிச்சொற்கள் :தகவல்கள், இயக்கம், தலைவர்கள், கட்சி
Add to Cartநாள்தோறும் உலகின் இயக்கம் மாறிக்கொண்டே இருக்க, மக்களின் தேடல் அறிவும் விரிந்துகொண்டிருக்கின்றது. உலகத்தின் ஒவ்வொரு அசைவும் மனிதனை புதிய திசைகள் நோக்கி சிந்திக்கவும் செயல்படுத்தவும் தூண்டுகிறது. அதில் சில சிந்தனைகள் ஆக்கத்தையும் சில செயல்பாடுகள் அழிவையும் ஏற்படுத்துகின்றன.
ஆனாலும், மனித மனம் அமைதி கொள்ளாது, புதிய புதிய தகவல்களுக்காக பொழுதுகள் தோறும் அலைந்துகொண்டே இருக்கிறது. அந்தத் தேடலுக்கு நல்ல தீனியாக, ஜூனியர் விகடனில் சமூக அரசியல் விமர்சகர் ஜென்ராம், சீரிய சிந்தனைக் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இந்த சிந்தனைப் பகுதியில் வெளிவந்த கட்டுரைகள் தொகுக்கப்பட்டு மனதின் ஓசைகள் என்ற தலைப்பில் நூலாக வெளிவந்திருக்கிறது.
கூட்டணி அரசியல், இட ஒதுக்கீடு என்று பல்வேறுபட்ட சர்ச்சைகளை இந்த நூலில் திறம்பட அலசுகிறார் ஜென்ராம். இந்தக் கட்டுரைகள் காலத்தின் சிறந்த ஆவணமாகவும் திகழ்கின்றன.
சமூக, அரசியலின் மீதும் சமூக ஒழுக்கத்தின் மீதும் நாட்டம் கொண்டவர்களுக்கு இந்த நூல் ஆத்ம நண்பன்.