மக்கா
Makka
₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கோபால்தாசன்
பதிப்பகம் :அறிவுப் பதிப்பகம்
Publisher :Arivu pathippagam
புத்தக வகை :சமயம்
பக்கங்கள் :89
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788188048960
குறிச்சொற்கள் :வழிபாடுகள், நம்பிக்கை, தெய்வம்
Add to Cartபுளியமர இலைகளில் மண்ணுல கூட்டாஞ்சோறு வச்சு புன்னை இலையில் காக்காவுக்கு வச்சு ' காகா' வெனக் கூவியழைக்கும் பிள்ளைத் தனமிக்க வயசு.
கிழ்வூட்டுக்கார்ர்க்கா மகா சமஞ்சுட்டா கண்டிப்பா மாவிடிச்சி பச்சக் கொழுக்கட்ட தருவாவென எதிர்பார்க்கும் அறியாமை.
சிந்தி வெளையாடி ஜெயிச்சப் பொறவு குடவண்டிக்காரன குண்டாமண்டிச் சொல்லிப் பரிகாசஞ் செய்யும் நாலஞ்சுக் கொமருக.
கொண்டக் கட்டுக் கட்டிக்கொண்டு சுட்டக் செங்கலடுக்கிச் சுமந்து போட்டுக்கொண்டு தாகத்தில் தவிக்கும் தெவளையிலக் கூட படிச்ச பிள்ளப் பாத்து அலவன் காட்டி 'கொள்ளாம்'னு போவது.
முழுதும், மன அரங்கத்தினில் எப்போதும் கூத்துக்கட்டி நிற்கும் போழ்து; விழித்திரையும்கூட ஒளித்திரையாய் மாறிவிடுகிறது.
பிறப்பின் வயசை உச்சி மோந்து நோக்குகின்ற இவ்வயசு, பின்புலத்தின் குளத்துக் களிமண்ணள்ளி நிக்கி சுவைத்துப் பார்க்கும் தாக்கோல் இந்நூலில்தான் உள்ளது.
நாஞ்சில் நாட்டின் வட்டாரச் சொற்களின் பரிமாற்றங்களை மெருகேற்றி நிற்கும் அழகினை; பாரம்பர்யம் தோய்த்ததெனச் சுட்டலாம்.