book

நினைவுகள் சுமந்தலையும் யாத்ரீகன்

Ninaivugal Sumanthalaiyum Yatreegan

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அபி மதியழகன்
பதிப்பகம் :அகநாழிகை பதிப்பகம்
Publisher :Aganazhigai Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2012
Add to Cart

வேளாண் குடும்பம் உருவாக்கிய மனநிலைக்கும் தொழில் நகரம் கட்டமைத்திருக்கும் மனநிலைக்கும் , இடையிலான உராய்வின் விளைவானவை இவரின் கவிதைகள். உலக மயமாக்கல் என்ற மூன்றாம் உலக மனிதர்களுக்கு வாழ்வின் புதிய ருசிகளைக் காட்டி, அந்நிலங்களுக்கு என்றிருந்த சிறந்த விழுமியங்களை அழித்து அவர்களை ஏகாதிபத்தி 'யங்களின் கூலிகளாக மாற்றி வைத்திருக்கிறது. 'டாலர் பிச்சைக்காரர்களாகியிருப்பதை கெளரவமாக கருதும் ஒரு தலைமுறையை விமர்சனம் செய்வதாக இக்கவிதைகள் அமைந்திருக்கின்றன.வேலையின் நிமித்தம் புலம் பெயர்தல், கிராமிய சமூகத்தின் சாதி இறுக்கம், கார்ப்பரேட்டுகள் உருவாக்கியிருக்கும் போலி நாகரிகம், பால்கவர்ச்சி, தமிழ்த்தேசிய சிக்கல்கள். ஏகாதிபத்திய ஒடுக்கு முறை என நம் சமூகம் எதிர்கொள்கிற எல்லா சிக்கல்களும் மதியையும் அலைக்கழிக்கின்றன, இத்தகைய நினைவலைகள் ஓயாமல் எழுப்பும் கேள்விகளை தன் கவிதை வழியாக நமக்கு ஆற்றுப்படுத்துகிறார் அபி மதியழகன்.