book

சிவப்பு பச்சை மஞ்சள் வெள்ளை

Sivappu Pachai Manjal Vellai

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :செல்வராஜ் ஜெகதீசன்
பதிப்பகம் :அகநாழிகை பதிப்பகம்
Publisher :Aganazhigai Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2014
ISBN :9788193001851
Out of Stock
Add to Alert List

பெருநகர வாழ்வில் நம்மை ஏமாற்றும் பெருவணிகக் கலாச்சாரத்தில் வண்ண விளக்குகளின் பங்களிப்பு மிக முக்கியமானது. இருட்டிலும் மெல்லிருட்டிலும் இரவைப் பருகிய பழம் சமூகத்தின் அடையாள அழிப்பென்றும்கூட சொல்லலாம், ஆனால் சாதீயம் போன்ற வெட்கக்கேடுகளைப் பதுக்கிய பழம் இருளை வெளிச்சம் போட்டுக்காட்டும் புதிய வண்ணங்களையும் விளக்குகளையும் இனிமேல்தான் நாம் உருவாக்க வேண்டும். விதிக்கப்பட்ட, அனுமதிக்கப்பட்ட, தினசரி சராசரி வாழ்வின் சுவர்களுக்குள் கவிதைக் கணங்களைத் தேடிச் சலிக்கும் தம் காலக்கவிஞர்களின் குழுமத்தில் செல்வராஜ் ஜெகதீசனும் இணைந்து விட்டார் என்பதை இத்தொகுப்பு நிரூபணம் செய்கிறது. தினசரி மனிதனின் நகர்வுகளில் எப்பொழுதாவது - தற்செயலாகக் கிடைக்கும் கவித்துவப் புள்ளிகளை இணைக்க ஜெகதீசனால் சில நல்ல கவிதைகளைத் தர முடிகிறது. இத்தொகுப்பு அத்தகைய கவிதைகளால் சிறப்புப் பெறுகிறது