book

காஞ்சி மகான் அண்ணல் செய்த அன்புதங்கள் 100

Kaanji Mahaan Annal Seytha Anbuthangal 100

₹110+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அழகர் நம்பி
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :256
பதிப்பு :1
Published on :2014
Add to Cart

'வெயிலுக்கு நிழல், தாகத்துக்கு தண்ணீர், பசிக்கு உணவு' - மாதிரி, தங்கள் குறையைக் கேட்கவும், சுமையை வாங்கிக் கொள்ளவும் தங்களைத் தாங்கி நிறுத்தவும் யாராவது கிடைத் தால் தேவலை மனிதர்களுக்கு. அந்த வகையில் அவர்களுக்கு ஆறுதலையும், ஆதரவையும் வழங்க முன் வந்தவர் 'காஞ்சி மகான்' என்றழைக்கப்படும் மகா பெரியவாள். நடமாடும் தெய்வமாகவே அவர் வாழ்ந்திருக்கிறார். மகா பெரியவாள் மற்றவர்களுக்காகவே வாழ்ந்தவர். மக்களின் நன்மைகளைக் கருத்தில் கொண்டே எதையும் செய்தவர் அவர். மகா பெரியவாள் அன்பையும், அறிவையும், கலைகளையும் பரப்புவதில் முனைப்பு காட்டியவர். அவருடைய மனித நேயம் வியக்கத்தக்கது. அவரை தரிசிக்க வேண்டும் என்று மக்கள் நாள்தோறும் வரிசைகட்டி நின்றார்கள். அவர்களுக்கு அறிவுரை யும், உபதேசமும், ஆலோசனையும் வழங்கியதோடு சகாயம் பண்ணுகிறவராகவும் இருந்தார் அவர். அபார ஞாபகசக்தியும், அருட்சக்தியும் உடையவர்.