அரவிந்த் ஹெர்பல் சித்த மருத்துவ மூலிகைகளும் பயன்களும்
Aravindh Herbal Siththa Maruthuva Mooligaigalum Payangalum
₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆசிரியர் குழு
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :328
பதிப்பு :2
Published on :2016
ISBN :9789386209214
Add to Cart145 முக்கிய மூலிகைகளின் படங்கள் மற்றும் விளக்கங்களுடன், மருந்துத் தயாரிப்பு முறைகளும் நிறைந்த மூலிகை அகராதி! ’மூலிகைகளும் அதன் பயன்களும்” என்ற தலைப்பில் ஏப்ரல், அக்டோபர் 2003 மற்றும் ஜனவரி 2008 ஆண்டுகளில் வெளிவந்த மூன்று பதிப்புகளும் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றிருப்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறோம். தற்போது அதிக பக்கங்களுடன், மூலிகையின் படங்கள், அதன் பாகங்கள் மற்றும் எளிய முறையில் மூலிகைகளைக் கொண்டு நோய்களை குணப்படுத்துவதற்கான குறிப்புகளையும் சேர்த்து வெளியிட்டுள்ளோம் மூலிகையின் தாவரப் பெயர், ஆங்கிலப் பெயர் வேறுமொழிப் பெயர்கள், அம்மூலிகையைப் பற்றிய பொதுக் குறிப்பு, அதன் மருத்துவ குணங்கள், அம்மூலிகையைக் கொண்டு நோய் தீர்க்கும் முறைகள், மூலிகைகளின் நச்சுத்தன்மை நீக்கும் முறைகள், மூலிகைகளில் அடங்கியுள்ள மருந்துப் பொருட்கள் என அனைவருக்கும் பயன் படும் வகையில் இந்நூல் வெளிவருவது சிறப்பாகும். மருத்துவர்களுக்கும், மூலிகை மீது ஈடுபாடு கொண்டவர்களுக்கும் மற்றும் எல்லோருக்கும் இந்நூல் பயனளிக்கும் என நம்புகிறோம். விழாக்களுக்கும், வைபங்களுக்கும் பரிசாக இந்நூலை வழங்கி மக்களிடையே மூலிகை விழிப்புணர்வை எற்படுத்திட அன்புடன் வேண்டுகிறோம்.