கூட்டத்திலிருந்து வரும் குரல்..!
Kootathilirunthu varam kural..!
₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜென்ராம்
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :அரசியல்
பக்கங்கள் :222
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788189936013
குறிச்சொற்கள் :தகவல்கள், வழிகாட்டுதல், சிந்தனை, சரித்திரம்
Add to Cartமுகத்துக்கு இரண்டு கண்கள் அவசியம். ஒரு கண் பழுதடைந்தால், மற்றொரு கண்ணைக் கொண்டு விசாலமாக விழித்துப் பார்ப்பது கடினம். அதுபோல நாட்டிற்கு, அரசும் அரசியலும் இரண்டு கண்கள். ஒன்று பழுதானாலும் சமூக ஒழுக்கம் என்கிற பார்வையும் சேர்ந்து பறிபோய்விடும். சமூகத்தை, அதன் ஒழுக்கத்தை நிலை நாட்டுவது அரசும் அரசியலுமே ஆகும்.
அப்படிப்பட்ட கண்களைப் பராமரிப்பது அவசியம். அதைப் பராமரிப்பவர்கள் சீராக, சரியாகச் செய்கிறார்களா என்பதை கண்காணிப்பது அதைவிட அவசியம். கண்காணிப்பவர்களுக்கு வழிகாட்டுதல் என்பது மிக முக்கியம்.
இங்கு அரசையும் அரசியலையும் பராமரிப்பது அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள். அவர்கள் அப்பணியைச் செவ்வனே செய்கிறார்களா என்பதைக் கண்காணிப்பது வாக்காளர்களாகிய மக்களே. அவர்களுக்கு வழிகாட்டியாகத்தான் 'ஜூனியர் விகடன்' இதழில் 'சிந்தனை' பகுதியில் விழிப்பு உணர்வுக் கட்டுரைகள் வருகின்றன.
அதுமட்டுமல்லாமல், உலகில் எங்கு, எது நடந்தாலும் அதை உடனுக்குடன் சரியான சமூக நோக்கத்தோடு சிந்தனைப் பகுதியில் அரசியல் விமர்சகர் ஜென்ராம் பதிவு செய்துவருகிறார்.
அந்தக் கட்டுரைகள் 'கூட்டத்திலிருந்து வரும் குரல்' என்ற தலைப்பில் இந்த நூலாக வெளிவந்திருக்கிறது. தமிழக சட்டமன்றத் தேர்தலின்போது தமிழகத்தில் நிகழ்ந்த அணிமாற்றங்கள், கட்சித்தாவல்கள், கருத்து மோதல்கள் என்று நிகழ்காலத்திலிருந்து கடந்த காலத்தைத் திரும்பிப் பார்க்க வைக்கிறார் நூலாசிரியர்.
கருத்துச் சுதந்திரம் பறிக்கப்படும்போது மக்களிடம் நிகழ்கிற கொந்தளிப்புகள், சமூகத்தில் நடக்கிற மாற்றங்கள் என்று அத்தனையையும் சமூகத்தின் குரலாக ஒலிக்கும் காலப் பெட்டகம்தான் இந்தக் கூட்டத்திலிருந்து வரும் குரல். இந்நூலில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு கட்டுரையும் அரசியலிலும் சமூகத்திலும் நிகழ்கின்ற யாவற்றையும் தோலுரிப்பவை. சமூகத்தின் மீது அக்கறை உள்ள ஒவ்வொருவரும் அவசியம் வாங்கிப் படிக்க வேண்டிய நூல் இது.