book

நிலமிசை சிவராஜ்

Nilamisai Sivaraj

₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சிவராஜ்
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :110
பதிப்பு :1
Published on :2005
ISBN :9788177352566
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு, முயற்சி, உழைப்பு
Add to Cart

 நிகழ்கால  வாழ்வின் முரண்பாடுகளையும் சிக்கல்களையும் எள்ளல் பாணியில் கிள்ளி விளையாடுவது சிவராஜூக்குக் கைவந்த கலையாகவே இருக்கிறது. கூரிய சொற்கள், நேரிய பார்வை இந்த மதிப்பீட்டிற்கு ஏற்ப அமைந்துள்ளன இந்நூலில் உள்ள கவிதைகள் நாட்டு மக்களின் பிரச்னைகள் பற்றி தமது கவலையை கவிஞர் வெளிப்படுத்துகிறார். கடுமையான உழைப்பு நல்ல பலனை அளிக்கும் என்று கருதுகிறார் . நாட்டின் நல்ல எதிர்காலத்தில் அவரது நம்பிக்கையை அவரது கவிதைகள்  வெளிப்படுத்துகின்றன. உதாரணத்திற்கு ஒரு சிலவற்றைக் குறிப்பிடலாம். அமோகமாக விளைந்த நிலத்தில் எண்ணெய் இருப்பதாகக் கருதி அந்த நிலம் கான்கிரிட் பூமியாக்கப்பட்டதை சித்தரிக்கிறார்.  சுதந்திரப் போராட்டத் தியாகிகள்  பட்ட இன்னல்களைப் பற்றி கூறுகிறது மற்றொரு கவிதை. லஞ்சம், மது, சின்னவீடுக்  கலாசாரத்தை சாடுகிறது ஒரு கவிதை. நம் நாடு முன்னேறுவதற்கான வாய்ப்புகளையும் கடின உழைப்பின் அவசியம் பற்றியும் கூறுகிறது வேறொரு கவிதை.

                                                                                                                                                       - பதிப்பகத்தார்.