முல்லை பெரியாறு அணை பிறந்த கதை
Mullai Periyaar Anai Pirantha Kathai
₹125+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜி. விஜயபத்மா
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :175
பதிப்பு :1
Published on :2014
ISBN :9788184765816
Add to Cartமேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகளில் உருவாகி அரபிக்கடலில் சென்று வீணாகக் கலந்துகொண்டிருந்த பெரியாறு நீரைப் பயன்படுத்த அன்றைய ஆங்கிலேய அரசு முடிவு செய்து அந்தப் பகுதியில் அணை ஒன்றைக் கட்டத் தீர்மானித்ததன் விளைவே முல்லை பெரியாறு அணைக்கு பிள்ளையார் சுழி. பெரியாற்றின் குறுக்கே மண் அணை அமைத்து அந்த ஆற்றின் நீரைக் கிழக்குப் பக்கமாகத் திருப்புவதற்கான வரைவுத் திட்டம் ஒன்றை சுமித் என்கிற ஆங்கிலேயர் தயார் செய்தார். பல்வேறு தடைகளுக்குப் பின், ராணுவப் பணிப் பொறியாளராக இந்தியாவுக்கு வந்த கர்னல் பென்னிகுயிக் முல்லை பெரியாறு திட்டத்துக்கு முழு வடிவம் கொடுத்தார். பிரிட்டிஷ் ராணுவக் கட்டுமானத் துறை இந்த அணை கட்டும் பணியை மேற்கொண்டது. அடர்ந்த காடு, விஷப் பூச்சிகள், காட்டு யானைகள், காட்டு மிருகங்கள், கடும் மழை, திடீரென உருவாகும் காட்டாறு போன்றவற்றைப் பொருட்படுத்தாமல் மூன்று ஆண்டுகள் பல கஷ்டத்துடன் அணை பாதி கட்டப்பட்டிருந்த நிலையில் தொடர்ந்து பெய்த மழை வெள்ளத்தில் கட்டப்பட்ட அணை அடித்துச் செல்லப்பட்டது. அதன் பிறகு இந்தத் திட்டத்துக்குப் பண ஒதுக்கீடு செய்ய ஆங்கிலேய அரசு மறுத்த நிலையில் கர்னல் பென்னிகுயிக் இங்கிலாந்துக்குத் திரும்பிச் சென்று தன் குடும்பச் சொத்துகள் அனைத்தையும் விற்று அதன் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு வந்து சொந்தமாகவே முல்லைப் பெரியாறு அணையைக் கட்டி முடித்தார். இதன் காரணமாக தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட நிலங்களுக்குத் தேவையான தண்ணீர் இன்றும் கிடைத்துவருகிறது. இந்த அணைக்குப் பின்னே பெரும் தியாகம் சுடராக ஒளிவிடுவது உங்களுக்குத் தெரியுமா? பென்னிகுயிக் நம் மக்களுக்கு ஆற்றிய சேவை என்ன? அணை கட்டப்படுவதில் ஏற்பட்ட இடர்ப்பாடுகள் என்ன? நூலாசிரியர் ஜி.விஜயபத்மா இவற்றைத் தெளிவாகத் தக்க ஆதாரங்களுடன் விளக்குகிறார். பல சர்ச்சைகளுக்கிடையே தமிழ் மக்களை வாழ வைத்துக்கொண்டிருக்கும் முல்லை பெரியாறு அணையின் வரலாற்றை நாம் தெரிந்துகொள்ள வேண்டாமா? முல்லை பெரியாறு வரலாற்றைப் படியுங்கள். தியாகத்தை உணருங்கள்.