பூர்ண சந்திரோதயம் பாகம் 2 (வந்துவிட்டார்! திகம்பர சாமியார்)
Poorna Chandrothyam Part 2(Vanthuvittaar! Thigambara Saamiyaar)
₹250+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்
பதிப்பகம் :தி ஜெனரல் சப்ளைஸ் கம்பெனி
Publisher :the general supplies company
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :330
பதிப்பு :2
Published on :2010
Add to Cartஜே.ஆர்.ரங்கராஜுவின் ஐந்தாறு நாவல்களும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒன்றாக 1916 முதல் 1923 வரையில் வெளிவந்தன. பிரஸ் சொந்தக்காரரான ரங்கராஜு பத்தாயிரம் பிரதிகளை அச்சிட்டு ஒவ்வொரு ஐநூறு பிரதிகளையும் ஒரு பதிப்பாகக் குறிப்பிட்டு 10 பதிப்புகள்வரை தன் நாவல்களை வெளியிட்டார். ராஜாம்பாள், ராஜேந்திரன், சந்திரகாந்தா, ஆனந்தகிருஷ்ணன் என்று ஒவ்வொரு நாவலும் வெளியாகும் போது மிகவும் பர பரப்பாக வாசகர்கள் வாங்கிப் படித்தனர். வரதராஜன் என்று இரண்டு பாகங்கள் வெளிவரும் வரையில் ஒன்றும் தடங்கல் இல்லை. 'வரதராஜனின் பல பகுதிகள் இலக்கியத் திருட்டு' என்று கேஸ் போட்டு, மேலே எதுவும் எழுதிப் பிரசுரிக்கக் கூடாது என்றும், ஆறு மாதம் ஜெயில் வாசம் அல்லது ஆயிரம் ரூபாய் அபராதம் என்றும் கோர்ட் அவருக்குத் தண்டனை விதித்தது என்று எண்ணுகிறேன். ஜெயிலில் இருந்து விட்டு வெளியே வந்து எழுதுவதை நிறுத்திவிட்டார் ரங்கராஜு.