லேடீஸ் ஹாஸ்டல்
Ladies Hostel
₹228₹240 (5% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எண்டமூரி வீரேந்திரநாத், தமிழில்: கௌரி கிருபானந்தன்
பதிப்பகம் :தி ஜெனரல் சப்ளைஸ் கம்பெனி
Publisher :Alliance Publications
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :314
பதிப்பு :2
Published on :2010
Add to Cartஎண்டமூரி வீரேந்திரநாத்
ஒரு எழுத்தாளர், மொழிபெயர்ப்புக்கள் மூலமாக. வேறொரு மொழி வாசகர்கள் மனத்தில் இடம்பெறுவது. மிகவும் அரிது. அந்த வரிசையில் எண்டமூரி வீரேந்திரநாத் குறிப்பிடத்தக்கவர்.
தொழில் முறையில் இவர் ஒரு சார்ட்டட் அக்கௌண்டண்ட் இவர் ஸ்டேட் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷனில் ஐந்து வருடங்களும், ஆந்திரா வங்கியில் உயர் அதிகாரியாக பத்து ஆண்டுகளும் பணியாற்றி எழுத்தின் மீதுள்ள ஆர்வத்தால் அதைத் துறந்து முழு நேர எழுத்தாளராக மாறி விட்டார்.
இவர் நாடகம், நவீனங்கள் பல எழுதியுள்ளார். சினிமா இயக்குனராகப் பணியாற்றியுள்ளார். இவருடைய முதல் திரைப்பட வசனம் ஜனாதிபதி விருதும், நான்கு தொலைக்காட்சி தொடர்கள் பல விருதுகளையும் மற்றும் தொலைக்காட்சி தொடருக்கான கோல்டன் நந்தி விருதையும் பெற்றுள்ளார். இவருடைய எழுத்தை அங்கீகரித்து "சாகித்திய அகாடமி' விருதும் வழங்கப்பட்டுள்ளது.
மனிதனுடைய திறமையை வளர்த்து, சுய முன்னேற்றமடையச் செய்வதில் தற்போது கவனம் செலுத்தி வருகிறார். இவருடைய 'வெற்றிக்கு ஐந்து படிகள் என்ற நூல் தெலுங்கில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் விற்பனையாகி சாதனை புரிந்துள்ளது.
ஆந்திராவில் என்.டி. ராமாராவிற்குப் பிறகு. இரண்டாவது பிரபலமானவராக - 1982 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.