அடிமையின் காதல்
Adimayin Kadhal
₹350+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ரா.கி. ரங்கராஜன்
பதிப்பகம் :அல்லயன்ஸ்
Publisher :Alliance Publications
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :456
பதிப்பு :2
Published on :2012
Add to Cartவரலாற்றைப் பின்னணியாக வைத்துப் பல கட்டுரைகளும்
சிறுகதை களும் எழுதியவர் தி.நா. சுப்பிரமணியம். ஒருமுறை அவரிடம் நான்
சரித்திரக் கதைகள் எழுத ஆசைப்படுவதாகச் சொன்னபோது, 'வெள்ளைக்காரன்
சென்னையில் குடியேறிய காலம் ரொம்பச் சுவாரஸ்யமானது. அதற்கான தகவல்களும்
வண்டி வண்டியாகக் கன்னிமரா லைப்ரரியில் கிடைக்கும். அதை வைத்து எழுது'
என்றார்.
சென்னை கார்ப்பரேஷனின் மூன்றாவது நூற்றாண்டையொட்டி ஒரு சிறப்பு மலர் வெளியிடப்பட்டிருந்தது. அதில் ஒரு கட்டுரையில், சென்னை நகரில் அடிமை வியாபாரம் நடந்ததாக ஒரு கட்டுரை படித்தேன்.
எம்.எஸ். சுப்பிரமணிய ஐயர் என்பவர் அந்த நாளில் சின்னச் சின்ன வாக்கியங்களில் விறுவிறுப்பாகக் கதை கட்டுரைகள் எழுதி வந்தார். அவருடைய நடை என்னை மிகவும் கவர்ந்தது.
எடிட்டர் எஸ்-ஏ. பி. அவர்கள் 'The Man From Rio' என்ற ஆங்கில படத்தை