book

சும்மா இருக்காதா பேனா?

Chumma Irukkadhaa Pena?

₹115+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ரா.கி. ரங்கராஜன்
பதிப்பகம் :வி.கே. புக்ஸ் இன்டர்நேஷனல்
Publisher :Jeneral Publishers
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :248
பதிப்பு :1
Published on :2012
Add to Cart

அண்ணாநகர் டைம்ஸ், மாம்பலம் டைம்ஸ் முதலான ஐந்து வட்டார வார இதழ்களில், வாரம் தவறாமல் நாலு மூலை என்ற தலைப்பில் சென்ற பதினொரு வருடங்களாக எழுதி வருகிறேன். ஒவ்வொரு வாரமும் இதுதான் நாம் எழுதும் கடைசிக் கட்டுரை. இனிமேல் எழுதுவதற்கு விஷயமும் கிடைக்காது. உடம்பும் ஒத்துழைக்காது என்று எண்ணிக் கொள்வேன். ஆனால் நான் சும்மா இருந்தாலும் என் பேனா சும்மா இருப்பதில்லை. கட்டுரை அனுப்ப வேண்டிய கிழமைக்கு இரண்டு நாள் முன்னதாக அது கூத்தாட்டம் போடத் தொடங்கும். ஏதாவது ஒரு விஷயம் கிடைத்து, எப்படியோ எழுதி விடுவேன். பிறகுதான் பேனா ஆட்டத்தை நிறுத்தும். அதனால் தான் 'சும்மா இருக்காத பேனா' என்று இந்தத் தொகுப்புக்குப் பெயர் கொடுத்திருக்கிறேன். எழுதியவற்றில் நல்லதென்று எனக்குத் தோன்றும் கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்துத் தனிப் புத்தகமாகவும் வெளியிட்டுள்ளேன். இதுவரை ஐந்து தொகுப்பு வந்திருக்கின்றன. இது ஆறாவது தொகுப்பு. இவ்வளவும் எழுதுவதற்கு இறைவனின் அருள் முதல் காரணம்.தெய்வம் அவர்களுக்கு எல்லா நலன்களும் அருள வேண்டுமென்று பிரார்த்திப்பதைத் தவிர வேறெப்படி நன்றி சொல்வேன்?