வம்புக்கு நான் அடிமை
Thebukku Naan Adimai
₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜே.எஸ். ராகவன்
பதிப்பகம் :அல்லயன்ஸ்
Publisher :Alliance Publications
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :197
பதிப்பு :1
Published on :2011
Add to Cartகற்பனையில் உருவாக்கப்பட்ட ஆப்பிரிக்க பங்கள்ளா, காடுகளில் வம்பேசி என்ற பெயரில் உலவும் ஆதிவாசிகளுக்கு சூட்டப்பட்ட அப்பெயர், காரணப் பெயரா அல்லது இடுகுறி பெயரா என்று தெரியவில்லை. ஆனால், நம் நாட்டில் வசிக்கும் பல பாரதவாசிகள், வம்பேசிகள். அதாவது, வம்பு பேசும் வாசிகள். வாய்க்கு ஒரு கவளம் உணவு கிடைகக்காவிட்டலும் பரவாயில்லை. குடிக்க நீர் கிடைகக்காவிட்டலும் பரவாயில்லை. பேச ஒரு பொருள் இருக்க வேண்டும் என்பார் வம்பேசிகள். பொருள் இல்லாமலேயே மணிக்கணக்கில் பேசும் வாய் வல்லமை படைத்த பழுத்த வம்பெசிகளும் உளர். வம்புக்கு அடிமையாக இருப்பதில், தமிழர்களைவிட வங்காளிகள் சூரர்கள். சிறிய சட்டியில் வழங்கப்பட்ட தேநீரை, சர்சர்ரென்று சப்தஞாத்லதுடன் உறிஞ்சிக்கொண்டு, தெருமூலையில் மணிக்கணக்கில் நின்று , தாதா கங்குலி இல்லாவிட்டால், தீதீ மம்தா பானர்ஜியை பற்றிப் பேசுவது, அவர்களுக்கு ரசகுல்லாவாகப் பிடிக்கும். ' அட்டாபாஜி' எனப்படும் இதை, ' பாஜி பாஜி பாஜி ... ஹமாதேர் அட்டா பாஜி ' என்று ரஜினி ஸ்டைலில் பாடிக் களிக்கிறார்களா தெரியவில்லை.
தாமஷா திலகம் ஜார்ஜ் புஷ் தோற்றபோது, பெருமூச்சு விட்டு சோகத்தை வெளிப்படுத்தியவர்கள், நகைச்சுவை சித்தர்கள் தான். ஏனென்றால், அவர்களின் இனிய பணிக்குத் தேவையான வம்பை, அன்னார வஞ்சனையில்லாமல் வாரி வழங்கிக் கொண்டிருந்தார். ம்பில்லாவிட்டால் நையாண்டி இல்லை. கிண்டல் இல்லை. தமாஷா வரிகளும் இல்லை. எனவே, அன்புக்கு நான் அடிமை என்பதுபோல், வம்புக்கும் நான் அடிமை. வம்பை ஈர்த்து, அதை எழுத்து மூலம் கொண்டுவந்து படிக்க அளிக்க, சில பிரத்யேக அன்டெனா தேவை. அதை, சென்னை எலெக்ட்ரானிக் தெருவான ரிச்சி ஸ்ட்ரீட்டில் காசு கொடுத்து வாங்க முடியாது. கடவுள்தான் அளிக்க வேண்டும். அவ்வரத்தை உபயோகிக்க, இரவு பகலாக மெனக்கெட வேண்டும். வாரம் வாரம் இவ்வாறு கிரகித்து, தொடர்ந்து 10 வருடங்களுக்கு மேல் தமாஷா வரிகள் கட்டுரைகளாக எழுத வாய்ப்பு அளித்து வரும் அண்ணாநகர் டைம்ஸ் மற்றும் மாம்பலம் டைம்ஸ் ஆசிரியர் ராமகிருஷ்ணன் அவர்களுக்கும், வாசகர்களின் கவன ஈர்ப்புக்குத் தேவையான படங்களை அற்புதமாகத் தீட்டிவரும் ஓவியர் நடனம் மற்றும் அழகிய தொகுப்பாகக் கொண்டு வந்திருக்கும் அல்லயன்ஸ் சீனிவாசன் அவர்களுக்கும் என் நன்றிகள் தொடர்ந்து படித்து, நேரிலும், இ-மெயில்கள் மூலமாகவும் முதுகைத் தட்டி ஆதரவு அளிக்கும் வாசகர்களின் வம்புக்கு மன்னிக்கவும் அன்புக்கு நான் அடிமை