பத்துப்பாட்டு குறிஞ்சிப்பாட்டு முல்லைப்பாட்டு மூலமும் உரையும்
Pathupaattu Kurinjipaattu Mullaipaattu Moolamum Uraiyum
₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் கதிர் முருகு
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :50
பதிப்பு :3
Published on :2012
Add to Cartமுல்லைத் திணைக்குரிய உரிப்பொருளான இருத்தலைப் பொருளாகக் கொண்டதால் இதற்கு முல்லைப்பாட்டு என்ற பெயர் அமைந்துள்ளது. கார்ப்பருவம் வருவதற்குமுன் திரும்புவதாக வாக்குறுதி தந்து போர்க்கடமை ஆற்றச் சென்ற தலைவன் வரும் வரையில், பிரிவுத் துயரைத் தாங்கி, இல்லறம் காக்கும் மனைவியின் ஒழுக்கம் பேசுவதே முல்லைத்திணை.இப்பாட்டில், தலைவன் பிரிந்துபோய்ப் பாசறையில் இருக்கிறான். தலைவி அரண்மனையில் இருக்கின்றாள். கார்காலம் வருகிறது. தலைவன் வாராமை கண்டு அவள் வருந்துகின்றாள். அரண்மனையில் அவளுக்குத் துணையாகவுள்ள முதிய பெண்டிர், தலைவன் வெற்றியோடு திரும்பி வருவான் என உறுதி கூறித் தேற்றுகின்றனர். அப்பொழுது தலைவனும் திரும்புகின்றான். இதனை, பாணர், கூத்தர் முதலிய வாயில்கள் தம்முள் கூறிக் கொள்வதாக இப்பாட்டுப் புனையப்பட்டுள்ளது.