book

சஞ்சீவி பர்வதத்தின் சாரல் மூலமும் உரையும்

Sanjeevi Parvathathin Saaral Moolamum uraiyum

₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் கமலா முருகன்
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :59
பதிப்பு :8
Published on :2012
Out of Stock
Add to Alert List

சஞ்சீவி பர்வதத்தின் சாரல்: குயில்கள் கூவிக் கொண்டிருந்தன; அழகிய மயில் தன் னுடைய தோகையினை விரித்து நடனமாடிக் கொண்டிருந்தது; நல்ல மலர்களிடையே நுழைந்து வெளிப்பட்ட காற்றானது நறுமணத்துடனும் அதே நேரத்தில் குளிர்ந்த தன்மையுடனும் வீசிக் கொண்டிருந்தது; தெளிந்த நீரினை உடைய ஊற்றுகள் (சுனைகள்) பார்ப்பதற்கு கண்ணாடியினைப் போன்று தோற்றமளித்தன (நீர் ஊற்றுகள் தெளிவாகத் தேங்கியிருந்ததனால் தண்ணீரில் முகம் தெரியும்படியாக இருந்தது என்பதனால் கண்ணாடி என்கின்றார்); சுவையான பழங்களையுடைய மரங்களும் அங்கு நிறைந்திருந்தன; அங்கு மலர்ந்திருந்த மலர்களிலும் நறுமணம் வீசிக் கொண் டிருந்தது; ஒவ்வொரு வாசமுடைய பூக்களாகத் தேடிச் சென்று தேன் அருந்திட வந்த வண்டுகள் அந்தத் தேனினை உண்ட மயக்கத்தில் அந்தப் பூக்களிலேயே தங்கியிருந்தபடி இனிமையான இசையினைப் பாடி மகிழ்ந்து கொண்டிருந்தன; அம்மலைப் பகுதியில் வசிக்கின்ற வேடவர் குலத்தைச் சார்ந்த பெண்கள் அந்த இடங்களில் விளையாடப் போவார்கள்; அவ்வாறே அந்தக் காட்டில் வாழும் வீரர்கள் காதல் மணங்களையே மிகுதியும் செய்வார்கள்; அனைவரும் மனத்தில் இதனை நினைவாக வைத்துக் கொள்ளுங்கள். இத்தகைய அழகிய இடத்தினைத்தான் 'சஞ்சீவி பர்வதத்தின் சாரல்' என்று அழைக்கின்றனர்.