book

பண்டைத் தமிழர் போர் நெறி

Pandai Tamilar Por Neri

₹130+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :புலவர் கா. கோவிந்தன்
பதிப்பகம் :ராமையா பதிப்பகம்
Publisher :Ramaiya Pathippagam
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :200
பதிப்பு :1
Published on :2011
Add to Cart

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்திய பழந்தமிழ் நாட்டு வாழ்வியலைப் படம் பிடித்துக் காட்டும் தொல்காப்பியர், புறத்திணை இயலில், பழந்தமிழ் மக்கள் மேற்கொண்டு நடத்திய போர் பற்றிய விளக்கங்களை அளித்துள்ளார். அத்தொல்காப்பியத்துக்கு உரை கண்ட பழைய உரையாசிரியர் களும், புதுப்புது விளக்கம் காணும் இன்றைய ஆராய்ச்சியாளரும், அன்றைய தமிழகத்தின் சூழ்நிலைகளைப் பின்னணியில் கொண்டு உரை காணத் தவறிவிட்ட காரணத்தால், தமிழர்கள் அறநெறி மறந்தவராகி, வலியார், மெலியார் மேல் செல்வது போல, பிறரைச் சென்று தாக்கும் அழிவுப் போரும் மேற் கொண்டனர் எனக்கொண்டு, அதற்கேற்ப, உரை வகுத்துள்ளனர்.
புறத்திணை இயலை, அவ்வுரைகளின் அடியொட்டிச் சொல்லாமல், அக்காலத் தமிழ் மக்களின் வாழ்க்கை நிலையை உணர்வில் கொண்டு ஆராய்வார்க்கு, அவ்வுரைகள் உண்மை பரைகள் ஆகா; புறத்திணை இயல் விளக்கும் பழந் தமிழ்ப் போர் சென்று தாக்கும் போர்கள் ஆகா; மாறாக, நின்று தாக்கும் போர்களே என்பது தெளிவுறப் புலனாகும்.