book

காந்தியடிகளின் வாழ்வும் வாக்கும்

Gandhiyadikalin Vazhvum Vakkum

₹110+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சொ.மு. முத்து
பதிப்பகம் :அறிவுப் பதிப்பகம்
Publisher :Arivu pathippagam
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :130
பதிப்பு :1
Published on :2013
ISBN :9789383670352
Add to Cart

உழைப்பாளி ஒரு நாட்டின் முதுகெலும்பு என்பதில் அண்ணல் காந்தியடிகள் உறுதியுடன் இருந்தார்.  இதைத் தம் போதனையாகவும் எடுத் துரைத்து வந்தார்.  உழைப்பாளிகளுக்காகப் போ ராடினார். கூலி உயர்வுக்காகப் போராடிய முதல் தேசியவாதி எனவும் அண்ணலைப் போற்றலாம். தொழிலாளிகள் மீதான வழக்குகளில் அண்ணல் காந்தியடிகள் பங்கேற்று வாதாடினார்.

தென்னாப்பிரிக்காவில் அண்ணல் தந்த இரண்டு வழக்குகளை விசாரணை செய்த நீதிபதி ஒரு வழக்கில் மன்னனுக்கு அதிகாரம் தந்து மற்றொரு வழக்கான உழவர்களின் அடிமைத்தனத்திற்கு முடிவுகூறாமல் ஒருபக்க நீதி தந்தார். இது கண்ட அண்ணல் மனம் வருந்தினார். அண்ணலின் வழக்குரையை மேலதி காரி அலட்சியம் செய்தார். இந்தியக் குற்றவாளிகளுக்கு இலண்டனில் தண்டனை விதிக்கப்பட்டது. இந்தியத் தாய்நாட்டில் உழைத்தவர்கள் கூலி கேட்டுப் பிழைக்கும் வழி இல்லையே என அண்ணல் வருந்தினார்.  பின் வழக்குப் பணிக்கு முடிவு கட்டினார். அடிமைத் தனமும்,கொடுமையும் எங்குத் தலை தூக்குகின்றன எனக் கண்டார். அங்கு அண்ணல் தம்மை அர்ப்பணித்துக் கொண்டார்.  அறப்போரில் இறங்கினார்.