நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள்
Neengal Kankanikka Padugireergal
₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :காம்கேர் கே. புவனேஸ்வரி
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :கம்ப்யூட்டர்
பக்கங்கள் :239
பதிப்பு :1
Published on :2013
ISBN :9788184765335
Add to Cartகண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம்’ என்றொரு பழமொழி உண்டு. சைபர் வேர்ல்டில் பயணிக்கும் ஒவ்வொருவரும், தனக்கு இன்னல்கள் வந்த பின்புதான் விழித்துக்கொள்வார்கள். மொபைல் போனை தொலைத்துவிட்டு IMEI எண் தெரியாமல் விழித்துக் கொண்டிருப்பார்கள். அவ்வாறு இல்லாமல் இன்னல் வருமுன் நம்மை பாதுகாத்துக்கொள்வதற்கு வழிகளைச் சொல்லித் தருகிறது இந்த நூல். டெபிட் கார்டு, க்ரெடிட் கார்டு, நெட் பேங்கிங், ஃபேஸ்புக், டிவிட்டர், பிளாக் போன்றவற்றைப் பயன்படுத்தும்போது எவ்வாறு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்; அவற்றில் பிரச்னை ஏற்பட்ட உடன் அதிலிருந்து பாதுகாத்துக்கொள்ள யாரை, எவ்வாறு அணுக வேண்டும் என்று விலாவாரியாக வகுப்பு எடுத்துள்ளார் நூல் ஆசிரியர் காம்கேர் கே.புவனேஸ்வரி. உட்கார்ந்த இடத்திலேயே அனைத்து வேலைகளையும் செய்யும் வசதி இணையதளத்தின் மூலம் நடக்கும்போது ஒரு சில ஆபத்துகளும் நம்மைத் தேடி வரத்தான் செய்கிறது. அந்த ஆபத்துகளிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ளும் வழிமுறைகளை, அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் மிக எளிமையாக எழுதியுள்ளார் நூல் ஆசிரியர். சைபர் வேர்ல்டில் நாம் பயணிக்கும்போது ‘மூன்றாவது கண்’ நம்மை கண்காணித்துக்கொண்டிருக்கும். நமது பாதுகாப்புக்காக நம்மைச் சுற்றி ஒரு கவசத்தை அணிந்துதான் பயணிக்க வேண்டியுள்ளது. அந்தப் பாதுகாப்புக் கவசமாக இந்தப் புத்தகம் விளங்கும் என்பதில் ஐயமில்லை. தன்னையும் தன் குடும்பத்தையும் பாதுகாத்துக் கொள்ளும் அக்கறையோடு இந்தச் சமுதாயத்தையும் பேணிப் பாதுகாக்கும் கடமை ஒவ்வொருவருக்கும் உண்டு. அந்தப் பாதுகாப்பைப் பெறுவதற்கு இந்த நூல் அவசியம் உதவும்.