பெண்ணே, ரிலாக்ஸ் ப்ளீஸ்
Pannae Relax Please
₹165+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுவாமி சுகபோதானந்தா
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :120
பதிப்பு :8
Published on :2016
ISBN :9788184763126
Add to Cartஇந்த உலகம் பிரச்னைகள் சூழ்ந்தது. எனவே, இல்லம் மகிழ்ச்சி நிறைந்ததாக இருந்தால்தான் உலகமும் சந்தோஷம் மிகுந்து காணப்படும். அப்படிப்பட்ட இல்லத்தை ஒரு பெண்ணால்தான் உருவாக்க முடியும்! பெண்கள் அறிவுமிக்கவளாக,அன்பு நிறைந்தவளாக, நேசப் பார்வை கொண்டவளாக, சுதந்திரம் உள்ளவளாக, நம்பிக்கை அளிப்பவளாக, பண்பு மிக்கவளாக தங்களை உருவாக்கிக் கொண்டால், இந்த உலகம் பெண்களை மிகப்பெரும் சக்தியாகப் போற்றும். அப்படிப்பட்ட பெண்களுக்கு ஆண்களும், அவர்களது குடும்பத்தாரும் நம்பிக்கையான சூழ்நிலையை அமைத்துக் கொடுத்தால் நிச்சயம் குடும்பத்தில் சந்தோஷம் குடிகொள்ளும். பெண்கள் மன மகிழ்ச்சியோடு இருந்தால்தான் குடும்பம் சந்தோஷமாக இருக்கும். இதற்காக கோபம், சந்தேகம், மன அழுத்தம், பொருளாதாரம் போன்ற சிக்கலான சூழ்நிலைகளைக் கடந்து பெண்கள் முன்னேற வேண்டியுள்ளது. இப்படி, பெண்களின் மனநிலையை அறிந்து, அவர்களிடத்தில் சிக்கிக் கிடக்கும் மன அழுத்தங்களை விலக்கி, அவர்களின் இதயத்தை இலகுவாக்குகிறார் சுவாமி சுகபோதானந்தா. அவள் விகடன் இதழ்களில் ‘பெண்ணே, ரிலாக்ஸ் ப்ளீஸ்!’ தொடராக வந்தபோதே பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த தன் உணர்வு கட்டுரைகள், இப்போது நூல் வடிவில் உங்கள் கைகளில் வீற்றிருக்கிறது. பெண்களின் மன இறுக்கத்தையும், மனதில் ஏற்படும் சந்தேக நோயையும் விளக்கி, பெண்களின் வாழ்க்கையைப் பண்படுத்தும் பயனுள்ள நூல் இது!