காமகோடி பெரியவா
Kamakodi Periyava
₹140+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சாருகேசி
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :152
பதிப்பு :7
Published on :2016
ISBN :9788184763560
Add to Cartநடமாடும் தெய்வமாகத் திகழ்ந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்து, நன்னெறி புகட்டி, அவர்களை நல்வழிப் படுத்திய மகான், காஞ்சி மகா பெரியவர். ‘பெரியவா...’ என்று நித்தமும் அவர் நினைவிலேயே வாழ்ந்து, அவருடைய கருணை நிழலில் இளைப்பாறி, துயரங்கள் மறந்து, உள்ளம் தூய்மை அடைந்த பக்தகோடிகள் ஏராளமானோர். காஞ்சிப் பெரியவருடனான தங்கள் அனுபவங்களை விவரிக்கும்போது பக்தர்களுக்கு நா தழுதழுக்கும்; கண்கள் பனிக்கும்; உடல் சிலிர்க்கும். அப்படி ஒருசில பக்தர்களின் பரவச அனுபவங்கள்தான் இந்த நூல் முழுவதும் விரவிக் கிடக்கின்றன. ‘காமகோடி பெரியவா’ அவர்களுடன் நெருங்கிப் பழகும் அபூர்வ சந்தர்ப்பம் கிடைக்கப் பெற்று, அவர் பாதமே கதி என்று சரண் அடைந்த பக்தர்கள் ஒருசிலரைச் சந்தித்து, அவர்களுடைய அனுபவங்களைக் கேட்டு அறிந்து, ‘சக்தி விகடன்’ இதழ்களில், ‘கருணை தெய்வம் காஞ்சி மகான்’ என்ற தலைப்பில் சாருகேசி எழுதிய கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த நூல். படிக்கும்போது இவை எதுவுமே பழங்கதைகளாகத் தோன்றாது. நம் கண்முன் நடப்பது போன்ற ஓர் உணர்வு ஏற்படும். அத்தகைய அனுபவங்கள் கிடைக்கப் பெற்ற மற்றவர்களும், தங்களுக்கு நேரிட்டதை அசைபோட்டுப் பார்த்து அகம் மகிழ்வார்கள். காஞ்சிப் பெரியவரின் அபூர்வ படங்களுடன் உங்கள் கரங்களில் தவழும் இந்த நூல், ஏற்கெனவே விகடன் பிரசுரம் வெளியிட்டிருக்கும் காஞ்சி முனிவர் பற்றிய இதர நூல்களுடன் இணைந்து புத்தக அலமாரியை நிறைக்கட்டும்!