ஸ்ரீமத் பகவத் கீதை
Srimadh Bhagavath Geethai
₹650
எழுத்தாளர் :க. ஸ்ரீதரன்
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :676
பதிப்பு :1
Published on :2012
ISBN :9789386433527
Add to Cartதமிழில், நமது மொழிபெயர்ப்பில் பகவத் கீதையைப் படித்தால் 3 மணி, 51
நிமிடம், 4 விநாடி நேரம் ஆகிறது. இதையே சம்ஸ்க்ருதத்தில் படித்தால்
இதைவிடக் குறைவான நேரமே தேவைப்படும்.
நமது பதிப்பில், பேசும் பாத்திரத்தால் சொல்லப்படும் பெயர் ஒரு முறையும்,
அந்தப் பாத்திரத்தின் பிரபலமான பெயர் அடைப்புக்குறிக்குள் மற்றொரு முறையும்
எனச் சொல்லப்பட்டிருக்கிறது. உதாரணத்திற்கு, "புருஷரிஷப" என்ற
சம்ஸ்க்ருதச் சொல், நம் மொழிபெயர்ப்பில், "ஓ மனிதர்களில் காளையே" என்று ஒரு
முறையும், அடைப்புக்குறிக்குள் {அர்ஜுனா} என்று மற்றுமொரு முறையும்
சொல்லப்பட்டிருக்கும். மேலும் சில, பல விளக்கங்களும்
அடைப்புக்குறிகளுக்குள் சொல்லப்பட்டிருக்கின்றன. இதனால் மட்டுமே கூட நேரம்
இரண்டு மடங்கு அதிகமாகியிருக்கலாம். மொழிபெயர்ப்பைப் படித்து
ஒலிக்கோப்பாகவும், காணொளிக் கோப்பாகவும் பதிவு செய்த சகோதரி தேவகி ஜெயவேலன்
மற்றும் வலையேற்றிய நண்பர் ஜெயவேலன் ஆகியோரின் தன்னலம் கருதாத உழைப்பால்,
நமது மொழிபெயர்ப்பில் பகவத் கீதையைப் படிக்க ஆகும் நேரத்தைக் கணக்கிட
முடிந்தது. அவர்களுக்கு நன்றி என்று சொல்லி, என்னில் இருந்து அவர்களைப்
பிரிக்க நான் விரும்பவில்லை.